தீவிரமாய் வந்து அங்கே ஓடித் தப்பித்துக்கொள் ESCAPE HITHER, COME QUICKLY 58-02-02 பிப்ரவரி 2, 1958 வாட்டர்லூ, ஐயோவா, அமெரிக்கா 1. உங்களுக்கு நன்றி. நாம் ஆராதிக்கும்படி வந்திருக்கும் அவரிடம் நாம் பேசிக் கொண்டு இருக்கையில் இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தாவே, இது எங்களுக்கு ஒரு மகத்தான நாளாக இருக்கிறது, கர்த்தர் அதை அவ்வாறு செய்திருக்கிறீர். நாங்கள் சந்தோஷமாக இருக்கட்டும். பரிசுத்தாவியினாலே எங்களுடைய இருதயங்களில் ஊற்றப்பட்டு இருக்கும் அவருடைய கிருபைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் இப்பொழுது, நாங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தின் பிரஜைகளாக ஆகியிருக்கிறோம். இனி கடைசியில் எவ்விதமிருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும் அவருக்கு சொந்தமான மகிமையான சரீரத்தைப்போல நாங்களும் ஒரு சரீரத்தைக் கொண்டிருப்போம் என்பதை அறிவோம், அவர் இருக்கிறவண்ணமாகவே நாங்கள் அவரைத் தரிசிப்போம். நாங்கள் உம்முடைய வார்த்தையை தியானிக்கும் இந்தப் பிற்பகல் வேளையில், அது எங்களுடைய இருதயங்கள் மற்றும் எங்களுடைய மனதை அசையாமல் நிலையாக இருக்கச் செய்யும் கயிறாக இருப்பதாக. ஒவ்வொரு இருதயத்தையும் ஆசீர்வதியும். இங்கேயுள்ள ஒவ்வொரு விசுவாசியையும் ஆசீர்வதியும். மேலும் கர்த்தாவே, அவருடைய வருகைக்காக எங்களை ஆயத்தப்படுத்தும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2.வெளியே அற்புதமான சூரிய வெளிச்சம் உள்ளது, இந்த வாரம் முழுவதுமே நாம் கொண்டிருக்க முடியாதது மிகவும் மோசமானது. ஆனால் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை அவர் அறிவார். நமக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை அவர் அறிவார். அது நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தரைக் குறித்த நல்ல காரியம் ஆகும், நாம் அவரிடம் கேட்பதற்கு முன்பாகவே நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். 3.எனவே, இந்த வாரத்தில் எனக்கு அநேக காரியங்கள் சாத்தியமாகி இருக்கிறது. நான்... இந்த வாரத்தைக் குறித்து நான் கொண்டிருக்கிற ஒரு பெரிய ஞாபகார்த்தம் என்னவெனில், அது அன்றொரு இரவில் இருந்த பரிசுத்த ஆவியானவருடைய சந்திப்பாக இருக்கும். நான் இன்னும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. ஓ, அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. இதற்கு முன்பாக என்னுடைய ஜீவியத்தில் ஒருமுறை மாத்திரமே அது சம்பவித்தது. இங்கேயிருக்கும் சகோதரன் உட்டும், நானும், அவருடைய சகோதரனும் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். உங்களில் அநேகர் அதைக் குறித்த விவரத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அது - அது அதே விதமாக மீண்டும் வந்தது. ஒரு நாளுக்கு முன்பதாக... பாருங்கள், இங்கேயிருக்கும் என்னுடைய நண்பரான திரு. உட் அவர்கள் ஒரு யேகோவா சாட்சிக்காரராக இருந்தார். யேகோவா சாட்சிகளாகிய உங்களுக்கு தேவன் இன்னும் பரிசுத்த ஆவியை வைத்திருக்கிறார்; அவர் நிச்சயமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பையன் அவருக்கிருந்தான். மேலும் அவன்... கர்த்தருடைய தூதனுடைய படம் எடுக்கப்பட்ட டெக்ஸாஸில் அவர் வந்திருந்தார். அப்போது அவர்... நான் கடல் கடந்து போயிருந்தேன். அவர் திரும்பி வந்து, இங்கே இக்கட்டிடம் இருக்கும் காலத்தைப் போல் அந்த அளவு காலமாக ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார், பரிசுத்த ஆவியானவர் அவரை அழைத்த போது, அவருடைய பையனை சுகப்படுத்தினார். அவனுக்கு எந்த கால் முடமாகிய் இருந்தது என்பது கூட இப்பொழுது அவனுக்குத் தெரியவில்லை. அவன் மிகவும் பரிபூரண சுகத்தோடு இருக்கிறான். 4.அப்போது, திரு. உட் அவர்களும் அவருடைய ஜனங்கள் அனைவருமே யேகோவா சாட்சிகளாக இருந்தனர்... அவருடைய சகோதரன் வந்தார். நல்லது, அவர் - அவர் இந்த விசுவாசத்தை எடுத்துக் கொண்டபடியால், அவருடைய குடும்பத்திலிருந்து அவர்கள் அவரைத் தள்ளி விட்டனர். அவருடைய சகோதரன் ஒருமுறை அவரைக் காணும்படி வந்தார். நான் புற்களை வெட்டிக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் சரியாக அவ்விடத்திலேயே அவரை இரட்சிக்க நேர்ந்தது. மேலும் உள்ளே வந்து, அவருக்கு வெளிப்படுத்தினார், எனவே அவர் போய் அவருடைய தகப்பனாரைத் அழைத்தார். அவருடைய தகப்பனார் பாதையில் வந்து கொண்டிருந்தார், நாங்களும் வந்தோம், அவர், ‘நாம் மீன்பிடிக்க போகலாம்’ என்றார். எனவே நாங்கள்... அந்தப் பாதையில் பரிசுத்த ஆவியானவர் வந்து, அந்தச் சுற்றுப்பயணத்தில் சரியாக என்ன சம்பவிக்கும் என்றும், சரியாக என்ன (வகையான) மீன் பிடிக்கப்படும் என்றும், யார் அவைகளைப் பிடிப்பார்கள் என்றும், அவைகள் எவ்வாறு இருக்கும் என்றும் அவரிடம் கூறினார். அது எவ்வளவு பரிபூரணமாக இருக்க முடியுமோ அவ்வளவு பரிபூரணமாக சம்பவித்தது. அது முற்றிலும் நேர்த்தியானதாக இருந்தது. இங்கே உணரமுடியாத வகையில் அவர் தம்முடைய வார்த்தைகளைப் பேசினார். அவருடைய பையன் அவரிடம் கேட்டான், அவன், ‘அப்பா, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றான். அவர், ‘நல்லது, ஒரு ஆள் தாம் மீன் பிடிப்பதற்கு முன்பே அந்த மீனைக் காணக்கூடுமானால், அது மெச்சத்தக்க விதத்தில் நன்றாக உள்ளதாக நான் ஊகிக்கிறேன்’ என்றார். 5.அதற்கும் ஒரு சில நாட்களுக்குப் பிறகு, மனந்திரும்பின அவருடைய சகோதரனாகிய லைலும் நானும் ஒன்றாக இருந்தோம். அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்; நாங்கள் கென்டக்கி ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அவர், ‘லைல், நாம் சென்று ஒரு வயதான குறிப்பிட்ட ஸ்திரீயிடம் கூற வேண்டும் என்பதை நீ அறிவாய்’ என்றார், அவள் சர்ச் ஆஃப் காட் சபையைச் சேர்ந்தவள், ஆண்டர்சன் சர்ச் ஆஃப் காட் சபை. அது முதலாவது சர்ச் ஆஃப் காட் சபை (First Church of God) என்று அழைக்கப்பட்டது என்று நம்புகிறேன். அவள் வழக்கமாக அவர்களிடம் மிகவும் அன்பாக இருந்து அவர்களை நேசித்தாள். அவர்கள் யேகோவா சாட்சியைச் சேர்ந்த சிறு பையன்களாக இருந்தனர், ஆனால்... ‘நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவளிடம் சொல்ல வேண்டும்’ என்றார். நல்லது, அவன் அதைச் சொன்ன போது, பரிசுத்த ஆவியானவர் வந்தார். நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்த படகில் நான் எழுந்து நின்று, ‘கர்த்தர் உரைக்கிறதாவது, சீக்கிரத்தில் ஒரு சிறிய பிராணி உயிர்த்தெழப் போகிறது, நீங்கள் அதைக் காண்பீர்கள்’ என்றேன். நான், ‘சிறிய பிராணியா-? அது எங்கிருந்து வந்தது... அது என்னவாக இருக்கும்-?’ என்று எண்ணினேன். 6.அடுத்த நாள் நாங்கள் மீண்டும் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் சூரிய மீன்களைப் பிடிப்பதற்காக ஒரு சிறு வளைகுடாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம் (pulled up). இங்கே இருக்கும் திரு. உட்டும், லைலும், ஏறக்குறைய இதைப்போன்ற ஒரு சிறிய சூரிய மீனைப் (sunfish) பிடித்தனர், ஒரு சிறிய நன்னீர் வகை மீன் (bream), நீங்கள் இங்கே அதை அவ்வாறு தான் அழைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்த சிறு மீன், தூண்டில் முள்ளை முழுவதுமாக விழுங்கி விட்டிருந்தது. எனவே அவர் அதை இவ்விதமாகப் பிடித்து, அப்படியே இழுத்தார். அது (தண்ணீரை விட்டு) வெளியே வருகிற போது, அவர் அந்தப் பெரிய தூண்டில் முள்ளோடு கூட, அந்த குடலையும் (stomach), செவுள்களையும், எல்லாவற்றையுமே இழுத்து விட்டார். அவர் அந்த மீனைத் தண்ணீரில் எறிந்தார். அந்த சிறு மீன் ஒரு சில தடவைகள் துடித்தது, அவர், ‘சிறு மீனே, நீயே உன்னுடைய பொறியை சுட்டு விட்டாய் (you shot your wad)’ என்ற விதமாகக் கூறினார். எனவே அந்த சிறு மீன் அங்கே தண்ணீரில் கிடந்தது, காற்று அதை ஒரு சிறிய வளைகுடாவுக்குள் பின்னோக்கி மிதக்கச் செய்தது. நான் ஏறக்குறைய அரை மணி நேரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தேன், திடீரென இங்கே அன்றொரு இரவில் வந்தது போல அந்த இடைவெளி வழியாக ஒரு முழக்கத்தின் சத்தம் வந்தது. இப்பொழுது இருப்பது போலவே சூரியனானது அருமையாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. நான் இருந்த இடத்தில் அந்த சத்தம் கேட்ட போது, நான் எழுந்து அந்த சிறிய மீனை அழைத்தேன். ஏதோவொன்று, ‘அந்த மரித்துப் போன மீனைப் பார்த்துப் பேசு’ என்றது. நான், ‘சிறிய மீனே, இயேசு கிறிஸ்து உன்னுடைய ஜீவனை மீண்டும் உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றேன். அது தன்னுடைய பக்கத்தில் மெல்ல அடித்துக் கொண்டு, தண்ணீரினூடாக எவ்வளவு கூடுமோ அவ்வளவு விசையோடு (நீந்திச்) சென்று விட்டது. எனவே தேவனுடைய எளிமையை நீங்கள் பார்க்கிறீர்கள். 7.அவர் சீஷர்களுக்கு ஒரு பாடத்தை நிரூபித்துக் காண்பிக்கும் பொருட்டு, அவர் ஒரு மரத்தின் மேல் தேவனுடைய மகத்தான வல்லமையை பயன்படுத்தியதை நாம் மாற்கு 11:24 மற்றும் 25-ல் காண்கிறோம். அவர் அதை ஒரு மீனின் மேலும் பயன்படுத்தினார். ஓப்பஸத்தைக் குறித்தும், எல்லா காரியங்களைக் குறித்தும் உங்களில் அநேகர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். தேவன் மிகவும் எளிமை யானவராகவும், மிகவும் எளிமையாக கிரியை செய்கிறவராகவும் இருக்கிறார், நீங்கள் ஏதோவொரு மகத்தானதும், உயர்ந்ததுமாகிய எங்கேயோவுள்ள சிறு கீர்த்தனையோடு (doxology) அதன் உச்சிக்கு மேலாகப் போய், நீங்கள் தேவனை இழந்து விடுகிறீர்கள். நீங்கள் அவரைக் காணும்படி அந்த எளிமையில் நோக்கிப் பார்ப்பதில்லை என்பது தான் அதற்குக் காரணம். நீங்கள் அப்படியே கீழிறங்கி வந்து அந்தக் காரியங்களைக் கவனிப்பீர்களானால், தேவன் சரியாக உங்களோடு அசைவாடிக் கொண்டிருக்கிறார். 8. அது வருவதை நான் எப்பொழுதாவது கேள்விப்பட்டதிலேயே அது முதல் தடவையாக இருந்தது. மேலும் பிறகு அன்றொரு இரவில், நான் அதைக் கேட்டு, ஜெபித்துக் கொண்டிருந்த போது, சரியாக இந்த மேடையின் மேல் நின்று கொண்டிருந்தேன். மேலும் இப்பொழுது, நான் இப்பட்டணத்தை விட்டுப் போகும் முன்பாக, இன்றிரவு இன்னுமொரு செய்தியைப் பெற்றுக் கொண்டேன். 9. மேலும் நான் இதை - இதைக் கூற விரும்புகிறேன். என்னுடைய ஊழியத்தின் அடுத்த கட்டம் சரியாக இப்பொழுதே அருகாமையில் உள்ளது என்றும், அது இப்பொழுதிலிருந்து நீடித்த காலத்திற்குப் பின்னும் இருக்கும் என்றும் நான் சிறிது காலத்திற்கு முன்பிருந்தே விசுவாசிக்கிறேன். எப்படி... நான் யாரோ ஒருவர் மேல் என்னுடைய கரத்தை வைக்கும் போதிருந்த, என்னுடைய ஊழியத்தின் முதலாவது ஆரம்பத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிற இங்கிருக்கும் யாராவது உண்டா-? உங்களுக்கு அது ஞாபகம் உள்ளதா-? சரி. நான் உத்தமமாக இருந்தால், நான் அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வேன் என்று சரியாக அப்போதே கர்த்தர் வாக்குத் தத்தம் பண்ணினார் என்பதை எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது-? அங்கே பின்னால் அது சொல்லப்பட்டது எத்தனை பேருக்குத் தெரியும்? அது சம்பவிப்பதைக் கண்டீர்களா? இப்பொழுது, வேறு ஏதோவொன்று சரியாக இப்பொழுதே வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே சரியாக விலகி போய்க் கொண்டிருக்கிறது. அது இன்னும் முக்கியமானதாய் இருக்கப் போகிறது, அது கடைசியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். அது ஒருவேளை இதுவாக இல்லாமல் இருக்கலாம்... அதெல்லாம் ஒன்றாக அதே விதமாகக் கிரியை செய்கிறது. 10.ஆனால் இப்பொழுது, இந்த பிற்பகல் வேளையில் சில வேத வாக்கியங்களுக்கு உங்களுடைய கவனத்தைக் கோர விரும்புகிறேன், தேவனுக்குச் சித்தமானால், இங்கேயுள்ள ஒரு - ஒரு பாடத்தின் பேரில் நாம் சிறிது நேரம் பேசுவோம். கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்று நாம் நம்புகிறோம். அதைப் பரிசுத்த லூக்காவில் காணலாம், ஒரு வேத வாசிப்புக்காக, பரிசுத்த லூக்கா 17-ம் அதிகாரம் 20-ம் வசனம். ஒரு சூழலைப் பெற்றுக்கொள்ளும்படி நான் இதை வாசிக்க விரும்புகிறேன். (லூக்கா 17: 26-29) நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமார னுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் ஜனங்கள் புசித்துக்... குடித்தார்கள், பெண் கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப் போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்; ஜனங்கள்... (இப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள்.)... ஜனங்கள் புசித்தார்கள்,... குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதேமை விட்டுப்புறப்பட்ட நாளிலே – நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து,... எல்லாரையும் அழித்துப் போட்டது. இப்பொழுது, ஆதியாகமத்தில், ஆதியாகம் புத்தகத்தில், ஒரு பாடத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், அது 19-ம் அதிகாரம் 22-ம் வசனம் என்று நம்புகிறேன். தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக் கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; இப்பொழுது, நாம் சிறிது நேரம் ஜெபிக்கும் போது, கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது கர்த்தாவே, அது உம்முடைய கரங்களில் உள்ளது, நீர் உம்முடைய வார்த்தைகளை எடுத்து, இந்தப் பிற்பகல் வேளையில் அவைகளை எங்களுடைய கண்களுக்கு எங்களுடைய இருதயங்-களுக்கு வெளிச்சமாக்கும். நாங்கள் ஒரு மகத்தான நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிதாவே, மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு வழியில் நீர் தாமே உம்மை எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறுவதேயில்லை. இப்பொழுது, இந்தப் பிற்பகல் வேளைக்காக நான் தெரிந்து கொண்டுள்ள என்னுடைய பாடம் என்னவெனில், ‘தீவிரமாய் வந்து அங்கே ஓடித்தப்பித்துக்கொள்,’ என்பதாகும். 11. இப்பொழுது, ஒரு சில இரவுகளுக்கு முன்பு, நான் ஸ்புட்னிக் செயற்கைக் கோளைக் குறித்துப் பேசிக்கொண்டிந்தேன். நான் உங்களிடம் பேசினது முதற்கொண்டு, மூன்று இரவுகளுக்கு முன்பு, அமெரிக்க அரசாங்கம் அல்லது இராணுவம் அவர்களுக்கு ஒரு ஸ்புட்னிக் செயற்கைக்கோளை ஏவியிருக்கின்றனர், அது ஏறக் குறைய ஒவ்வொரு 100 அல்லது 200 நிமிடங்களுக்கு உலகத்தைச் சுற்றிலும் சுற்றியவாறு போய்க் கொண்டிருக்கிறது. என்ன சொல்லப் பட்டதோ அது சமீபமாய் உள்ளது என்பதை மாத்திரமே அது சுட்டிக் காட்டுகிறது. இப்பொழுது, மனிதர்களும் ஸ்திரீகளும் தங்களுடைய கண்களைத் திறந்து, தேவனுடைய வார்த்தைக்குள் நோக்கிப்பார்க்க வேண்டியதான ஒரு நாள் எப்பொழுதாவது இருக்குமானால், அது இன்று தான் என்று நம்புகிறேன். இது தான் அந்த நாள், ஏனெனில் அங்கே ஒரு நாளைய தினம் இல்லாமல் இருக்கலாம். சபையானது எப்பொழுதாவது அதனுடைய ஆயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ள வேண்டுமானால், அது இன்றைய தினமாகத்தான் இருக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் அதைத்தள்ளிப் போட வேண்டாம். எடுத்துக் கொள்ளப்படுதலில் போவதிலிருந்து உங்களை தடை செய்கிற ஏதாவது காரியம் உங்களுக்கும் தேவனுக்குமிடையே இருக்குமானால், நீங்கள் இப்பொழுதே அதைச் சரி செய்வது நல்லது. உங்களுடைய இருக்கையை விட்டுப் போய் விட வேண்டாம். சீக்கிரமாய் இருக்கப் போகிற ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தருடைய வருகையின் எதிர்பார்ப்புகளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அந்த மணி நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இயேசு தாமே, ‘இவைகள் சம்பவிக்கத் தொடங்குவதை நீங்கள் காணும் போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், உங்கள் தலையை உயர்த்துங்கள்’ என்று கூறியிருக்கிறார். வானங்களில் அடையாளங்கள், அச்சம் ஊட்டுகிறகாட்சிகள், மனிதனுடைய இருதயம் பயத்தினால் செயலற்று போகுதல், சமுத்திரம் முழக்கமாயிருத்தல், ஆழிப் பேரலைகள், பெரிய காரியங்கள் (போன்றவை) சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. யாரோ ஒருவர், ‘சகோ.பிரன்ஹாமே, நீர் ஏன் அந்தக் காரியங்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறீர்-?’ என்று ஒரு வேளை தங்களுடைய தலையில் கூறியிருக்க வேண்டும் என்று நான் அறிவேன். அது என்னுடைய இருதயத்தில் உள்ளது. அது ஒரு வேளை இன்றும் தாக்கப்பட வேண்டும் என்று நான் அறிவேன். 12. இப்பொழுது, நாம் பாபிலோனின் பேரிலும் சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்தின் பேரிலும் பேசிக் கொண்டிருந்தோம். மேலும் இன்று நாம் இங்கேயிருக்கையில், நாம் அநேகமாக நம்முடைய முகத்தில் வீசுகிற நியாயத்தீர்ப்பின் உஷ்ணக்காற்றை உணர முடியும். உலகமானது அதனுடைய முடிவில் வந்துள்ளது. கர்த்தராகிய இயேசுவின் வருகைக்குப் புறம்பே இந்த உலகத்திற்கு ஒரு நம்பிக்கையும் இல்லை. அது தான் ஒரே நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் ஒரு ஐசன்ஹோவரை ஒவ்வொரு தேசத்திலும் வைக்க முடியும், அமெரிக்கா இன்னும் பாவத்தில் நடந்து கொண்டிருக்கும். நான் எந்த மகத்தான எழுப்புதலுக்காகவும் எதிர் நோக்கியிருக்க வில்லை. அதைக் குறித்த காரியம் என்னவெனில், எழுப்புதல் வந்து போய்விட்டது, நீங்களோ அதை அறியவில்லை. அது எப்போதுமே அவ்வாறு தான் இருந்து வந்துள்ளது. நீங்கள் ஏதோவொன்றுக்காக எதிர்நோக்கியிருக்கிறீர்கள், சாத்தான், ‘இங்கே மகத்தானது இருக்கப் போகிறது, இங்கே மகத்தானது இருக்கப் போகிறது’ என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பான். மேலும் அது சரியாக உங்கள் பக்கத்தில் கடந்து செல்லும். யோவான் ஸ்நானன் பூமியில் வந்திருந்த போது, நீதிமான்கள் கூட அவனை அடையாளம் கண்டு கொண்டார்களா-? சீஷர்கள், ‘எலியா எப்போது வருவார்?’ என்று கேட்கவில்லையா-? அவர், ‘அவன் ஏற்கனவே வந்தாயிற்று, நீங்களோ அதை அறியவில்லை’ என்றார். எழுப்புதலானது சற்று ஏறக்குறைய முடிந்து விட்டது. பெரிதான எதையும் எதிர்நோக்கியிருக்க வேண்டாம். நாம் ஏற்கனவே வானத்தில் மிகப்பெரிய காரியத்தைப் பெற்றிருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் இந்த சந்ததியில் தம்மைத்தாமே வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார். செய்யப்படக் கூடிய வேறு எதுவும் கிடையாது. 13. ஆனால் உலகமானது வரப்போகிற நியாயத்தீர்ப்புகளை உணருகிறது. செய்தித்தாள்கள்... பென்டகனில் அவர்கள் கூறினதைக் கேட்டிருக்கிறேன், எனக்குத் தெரியாது, ஆனால் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். நல்லது, என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு புத்தகம் மாத்திரமே உண்டு, அது தான் தேவனுடைய வேதாகமம். என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூறக்கூடிய ஒரே காரியம் அது தான்; உங்களுடைய தலையை உயர்த்தி, மேலே நோக்கிப் பாருங்கள். தப்பித்துக்கொள்வதற்கு அங்கே வேறு வழி கிடையாது. அது ஏற்கனவே மனிதர்களுடைய கரங்களுக்குள் வந்துள்ளது, அவர்கள் விரும்பினால், இந்த உலகத்தை ஒரு மணிநேரத்தில் அழித்துப் போட முடியும். இப்பிற்பகல் வேளையில், ரஷ்யாவை தடை செய்து வைத்திருப்பது என்ன, ஓட்கா என்ற மதுவகையை அதிகமாகக் குடிக்கக் கூடிய அந்த தலைவர்களில் ஏதாவது ஒருவர், ஒரு பட்டனை அழுத்தி, இந்த முழு உலகத்தையுமே அதனுடைய சுற்றுப் பாதையை விட்டு வெளியே அனுப்புவார், அது வேதவாக்கியங்களுடன் சிறிதளவும் முரண்பட்டிருக்காது. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். பாருங்கள், நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 14. நான் இதை உங்களுடைய மனதில் கொண்டு வர விரும்புகிறேன். இந்த வாரத்தில் சம்பவித்ததாக நாம் கண்டிருக்கிற இந்த எல்லா காரியங்களும், ஒரு இடத்தில் இதைப் போன்ற ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்துகிற போது, ஜனங்கள் சிரத்தையற்றவர்களாய் இருக்கும் போது, அந்த காரியம் சமீபமாய் உள்ளது என்பதை அது முற்றிலுமாகச் சுட்டிக் காட்டுகின்றது. உங்களைப் போன்ற விசுவாசமுள்ள ஒரு சிறு கூட்டம் தொடர்ந்து அநேக நாட்களாக, அநேக இரவுகளாக ஒன்று கூடுவதைக் காண்கிறோம், ஏனெனில் ஏதோ ஓன்று உங்களை அழுத்திக் கொண்டிருக்கிறது, உங்களில் ஏதோவொன்று உள்ளது. ஆவியால் நிறைந்த ஜனங்களாகிய உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கும் ஏதோவொன்று உங்களுக்குள்ளே இருக்கிறது. இப்பொழுது, ஒரு வேளை அதிகம் படித்தவரும், தங்களுடைய வார்த்தைகளை மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் பேசக் கூடியவருமான ஏதோவொரு மகத்தான வேதப் பண்டிதர் நகரத்தில் வருவாரானால், அநேகமாக நகரத்திலுள்ள ஒவ்வொரு சபையும் முழுவதுமாக ஒத்துழைப்புக் கொடுக்கும். நீங்கள் வெளியே போய் ஒரு அற்புதமான பேச்சாளராகிய அந்த மனிதன் பேசுவதைக் கேட்பது என்பது ஒரு விதமான கனப்படுத்துகிற காரியமாக இருக்கும். ஆனால் சபையானது அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை. சபை ஆனது - உண்மையான விசுவாசியானவன் பரிசுத்த ஆவியினுடைய தெளிவான வெளிப்பாட்டிற்காகவும், தங்களுடைய இருதயத்தில் அசைவாடுகிற ஏதோவொன்றிற்காகவும் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறான். அது என்னவென்று பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்த பிற்பகல் வேளையில் அது என்னவென்று உங்களிடம் விளக்கிக்கூறும்படிக்கு தேவன் எனக்கு உதவி செய்வாராக. 15. சமீபத்தில் இந்தியாவுக்குப் போவதற்கான சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது, அங்கே கர்த்தருடைய வழிநடத்துதல் எனக்கு இருந்தது. போதுமான அளவு மனதில் பதிந்தது, நான் இந்தியாவை அடைந்த போது, அவர்கள் அப்பொழுதுதான் ஒரு பூமி அதிர்ச்சியைக் கொண்டிருந்தனர். நான் செய்தித்தாளிலிருந்து ஒரு துண்டு பேப்பரை எடுத்தேன், அது இன்றிரவில் அல்லது இன்று கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் அலுவலகத்தில் உள்ளது, அதை என்னுடைய... என்னுடைய நல்ல நண்பரான டாமி நிக்கல்ஸ் அவர்கள் வெளியிடப் போகிறார்கள். ஒரு விநோதமான காரியம் சம்பவிக்கத் தொடங்கியது. ஏறக் குறைய இரண்டு நாட்களுக்கு முன்பு, பூமியதிர்ச்சி அத்தேசத்தை தாக்கினது. மேலும் இங்கேயும் அதை நாம் கொண்டிருந்தோம், அங்கே ஒரு விநோதமான காரியம் சம்பவித்தது, எல்லா கால்நடைகளும், எல்லா சிறு பறவைகளும் தங்களுடைய கூடுகளிலும், மேலே புகை போக்கிகளில் தங்களுடைய இளைப்பாறும் இடங்களிலும், இந்தியாவில் இருந்த பெரிய சுவர்களிலும் (வசித்துக்) கொண்டு இருந்தன... அவர்களிடம் மிக அதிகமான வேலிகள் இல்லை; அது பெரிய கல்லினாலான சுவர்களாக இருக்கிறது, அவர்கள் கற்களை எடுத்து சுவரைக் கட்டுகின்றனர். அந்த இடங்களில் இளைப்பாறிக் கொண்டு, வசித்து வந்த சிறு பறவைகள் அனைத்தும் வெளியே பறந்து போய், தங்கும்படியாக வெளியே வனாந்திரங்களுக்குப் போய்விட்டன. உஷ்ணமான சூரிய வெளிச்சத்தை விட்டு விலகி இருக்கும்படி சாயங்கால நேரத்தில் அந்த சுவர்களைச் சுற்றிலும் இருந்த அந்தக் கால்நடைகள் வெளியே போய் பசும்புல் மேய்ச்சல் நிலத்தின் மத்தியில் நின்று விட்டன. அது என்னவாக இருந்தது-? ஒரு பூமியதிர்ச்சியை காண்பிக்கும்படிக்கு அங்கே ஒரு சாதனமும் கிடையாது. வரப்போகிற இந்த பூமி அதிர்ச்சியை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஓ, நான், ‘அவருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக’ என்று கூறுவேனாக. அது வந்து கொண்டிருந்தது என்பதை சிருஷ்டிகர் அறிந்திருந்தார், அவர் தம்முடைய சிறிய சிருஷ்டிகளை அந்த சுவர்களை சுற்றிலுமிருந்து அப்புறப்படுத்தினார், ஏனெனில் அவைகள் தரையில் படுத்திருந்து, கொல்லப்படாமல் இருந்தன. 16. உள்ளுணர்வின் மூலமாக, ஒரு சிறு பறவை... அதற்கு ஆத்துமா கிடையாது. ஒரு சிறு பறவையும் ஒரு பசுவும் உள்ளுணர்வின் மூலம் கொல்லப்படுவதிலிருந்து காக்கப்படும் பொருட்டு, மதில் சுவர்களை விட்டு (போகும்படி) தங்களுடைய வழியை உண்டாக்க முடியுமானால், சபையானது இந்த மகத்தான வரப்போகும் நியாயத்தீர்ப்பினின்றும், விலங்குகள் தீனி கொள்ளும் பழைமையான இடங்களைச் சுற்றிலும் இருந்து இழுக்கப்பட்டு, எவ்வளவு அதிகமாக நீங்கள் உபத்திரவத்தின் நடுவில் நின்று மேலே நோக்கிப்பார்க்க வேண்டும், மீட்பு சமீபமாய் உள்ளது. தேவன் தம்முடைய பறவைகளை எச்சரித்தது போல, அவர் தம்முடைய ஜனங்களையும் கூட எச்சரிக்கிறார். அது தான் இந்த நாளாக உள்ளது, அநேக ஜனங்கள் தேவனுடைய பிள்ளைகளுடன் அசையாமல் நிற்கும்படி, இந்த மகத்தான பெரிய கிறிஸ்தவ கோயில்களை விட்டும் சமூக சுவிசேஷத்தை விட்டும் வெளியே வருவதற்காக விலகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெறிபிடித்தவர்கள் என்றோ அல்லது தாங்கள் விரும்பும் எதுவாகவும் அழைக்கப்பட்ட போதிலும், அவர்கள் அசையாமல் நிற்கிறார்கள். அது அவர்களை எச்சரிக்கை செய்யும் பரிசுத்த ஆவியாக இருக்கிறது. நிச்சயமாக அது தான். வரப்போகிற இந்த நியாயத்தீர்ப்பு... ஓ, இதைச் செய்து கொண்டிருப்பதற்காக நான் எவ்வளவாக தேவனை நேசிக்கிறேன். 17.தேவன் பாவத்தை வெறுக்கிறார், பாவம் நியாந்தீர்க்கப்பட்டாக வேண்டும். தேவன் அமெரிக்காவை அதன் பாவத்திற்காக மிக சீக்கிரமாக நியாயந்தீர்க்கவில்லை என்றால், அவர் சோதோம் கோமோராவை உயிரோடெழுப்பி, அவைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. நிச்சயமாக. நாம் விதைத்ததை நாமே அறுப்போம், ஆவிக்குரிய விதமாக எதையாவது பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் அது சத்தியமென்று தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம். நீங்கள் கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை அறிவதென்பது - நீங்கள் அங்கே இருக்கக்கூடிய ஒரு வழி மாத்திரமே உள்ளது. அங்கே இருக்கும்படி தேவன் உங்களை தெரிந்து கொண்டிருக்கும் காரணத்தால் தான். ‘என் பிதா முதலாவது ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்.’ தேவன் அவருக்குக் கொடுக்கிற அனைவரும் – அவர் அவனை கடைசி நாட்களில் எழுப்புவார். 18. இப்பொழுது, இயேசு பேசத் தொடங்கி, ‘நோவாவின் காலத்தில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்’ என்று கூறுகிறார். இப்பொழுது, அவர் சொன்ன காரியங்களில் சிலவற்றைக் கவனியுங்கள். அவர், ‘நோவாவின் நாளில் அவர்கள் புசித்தார்கள், குடித்தார்கள், பெண் கொண்டார்கள், பெண் கொடுத்தார்கள்’ என்று கூறினார். உலகம் முழுவதிலும் அதிகமான விவாகரத்துக்கள் எங்கு நடக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா-? அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தான். உலகத்தின் எந்த இடங்களிலும் உள்ளதைக் காட்டிலும் அதிகமான விவாகரத்து விழுக்காட்டை அது பெற்றுள்ளது. 19. லோத்தின் நாட்களில் நடந்தது போல என்று அவர் சொன்னதைக் கவனியுங்கள். ‘லோத்தின் நாட்களில், அவர்கள் புசித்தார்கள், பெண் கொண்டார்கள், பெண் கொடுத்தார்கள்’ என்று கூறினார். மேலும் அவர்கள் கட்டினார்கள், நட்டார்கள். கட்டிடம் கட்டுதல் முன்னேற்றம் அடைந்து வரும் இப்படிப்பட்ட ஒரு காலத்தை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா-? நூறு வருடங்களுக்கு முன்புள்ள மனிதனைப் பாருங்கள், 6000 வருடங்களுக்கு முன்பிருந்த அதே மனிதனாக அவன் இருக்கிறான். ஆனால் ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு வரை அவன் ஒருபோதும் அந்த அளவு அதிகமாக முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. அது மிகவும் மேலான நிலையில் அமைந்து இருக்கவில்லை, அவர்கள் ஒரு செய்தியை (அக்காலத்தில்) அனுப்பக் கூடியதான ஒரே வழி என்னவெனில் ஒரு கடிதம் மூலமோ, தகவல் கொண்டு செல்பவர் மூலமோ அனுப்ப முடிந்தது. இப்பொழுது, (செய்தி அனுப்புவதற்கு) தொலைபேசியும், தந்தி முறையும், தொலைக் காட்சியும் உள்ளது. அது எவ்வளவு துரிதமாக உலகத்தைச் சுற்றிலும் (செல்கிறது), இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், ஒரு செய்தி உலகத்தில் வேகமாக பறந்து செல்ல முடியும், 200 வருடங்களுக்கு முன்பு, அது செய்தி கொண்டு செல்பவன் மூலமாக மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டு போக வேண்டியிருந்தது. வித்தியாசத்தைக் கவனியுங்கள். 350 வருடங்களுக்கு முன்பு, ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர், ஒரு மனிதன் மணிக்கு 40 மைல் வேகத்தில் பயங்கரமான வேகத்தில் எப்பொழுதாவது போவானானால், புவி ஈர்ப்பு விசையானது அவனை பூமியை விட்டு உயரே கொண்டு சென்று விடும் என்று கூறினார். இப்பொழுது, அவர்கள் மணிக்கு 1900 மைல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ஒரு செயற்கைக்கோள் மணிக்கு 18,000 மைல் வேகத்தில் இன்னும் தொடர்ந்து வேகமாக பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு அதில் ஒரு மனிதனை அது கொண்டிருந்தது. நிச்சயமாக. முன்னேற்றமானது வேகமாக போய்க் கொண்டிருக்கிறது; அது இரண்டு மடங்கு வேகத்தில் (double headed speed) இருக்கிறது. அது அந்தவிதமாக இருக்கும் என்று தேவன் கூறினார். 20. இப்பொழுது மற்ற ஜனங்கள் கொண்டிருக்கிற இந்த எல்லா பெரிய காரியங்களை நாம் ஏன் பெற்றிருக்கவில்லை என்றும், மரியாதைக்கு உரியவர்களில் மேலானவர்களாக நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என்றும் நாம் சில சமயங்களில் வியப்படைகிறோம். நான் இந்த பூமிக்குரிய மரியாதைக்குரியவனாக இருக்க விரும்பவில்லை; நான் தேவனுடைய மரியாதைக்குரியவனாக (up-and-ups) இருக்கவே விரும்புகிறேன். 21. கவனியுங்கள். ஆதியிலே காயீன் ஆபேல் என்ற இரண்டு பையன்களுமே தேவனை ஆராதிக்கும்படி வந்து, அவர்கள் இருவருமே சபைகளைக் கட்டினார்கள்; அவர்கள் இருவருமே பலி பீடங்களைக் கட்டினார்கள்; அவர்கள் இருவருமே சபையைச் சேர்ந்திருந்தனர். அவர்கள் இருவருமே மரியாதைக்குரியவர்களாக இருந்தனர்; தேவன் தேவனாக இருந்தார் என்ற அதே கருத்தை இருவருமே கொண்டு இருந்தனர், அவர்கள் உத்தமமாக முழங்கால் படியிட்டு, தேவனை ஆராதித்தனர். ஒருவன் மற்றவனைப் போல அந்த அளவு அடிப்படை வாதியாக இருந்தான். தேவன் அடிப்படை வாதத்தை மாத்திரமே கனம் பண்ணுவாரானால், ஆபேலைப் போல அதே விதமாகச் செய்த காயீனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவர் அநீதி உள்ளவராய் (unjust) இருந்திருப்பார். இதைக் கவனியுங்கள். ஏதோ ஓன்று ஆபேலுக்கு சம்பவித்தது, என்ன செய்ய வேண்டுமென்று அவன் அறிந்து கொண்டான். 22. இப்பொழுது அந்த இரண்டு மரங்களும் வளர்ந்து கொண்டு இருப்பதைக் கவனியுங்கள். அவர்கள் மேலே வருகின்றனர். அவர்கள் ஆதியாகமத்தில் இருந்து யாத்திராகமத்திற்குள் வருகின்றனர். அங்கே இஸ்ரவேல் தன்னுடைய பாதையில் இருந்தான், அவன் ஒரு ஸ்தாபன ரீதியாக இல்லாதவனாக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு தேசத்திற்குள் (போகும்படியான) தன்னுடைய பாதையில் இருந்தான். அங்கே அவனுடைய சகோதரனாகிய மோவாப் இருந்தான், மோவாப் ஒரு பிஷப்பைக் கொண்டிருந்தான். அவர்கள், இவர்களை அங்கே வெளியே கொண்டு வந்தனர், அவர்கள் இருவருமே சகோதரர்கள், மோவாபும் யாக்கோபும்; அவர்கள் இருவருமே அடிப்படையில் சரியாக இருந்தனர். மேவாப் ஏழு பலி பீடங்களையும், ஏழு பலிகளையும், ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் கொண்டிருந்து கிறிஸ்துவின் வருகையைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தான். கீழே கூடாரங்களில் –இஸ்ரவேலின் கூடாரத்தில் ஏழு காளைகளும், ஏழு பலிபீடங்களும், ஏழு ஆட்டுக்கடாக்களும் இருந்தன. அடிப்படை ரீதியாக அவர்கள் இருவருமே சரியாக இருந்தனர். ஆனால் இஸ்ரவேலிடம் வெளிப்பாடு இருந்தது. இஸ்ரவேலுடன்... மோவாப் அப்படியே விறைப்பான ஆசார நுணுக்கம் பார்க்கிற சபையைக் கொண்டிருந்து, மிகவும் அடிப்படை ரீதியாக இருந்தனர். ஆனால் மேவாபும் கூட அடிப்படை வாதத்தையும், அநேக முட்டாள்தனங்களையும் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மத்தியில் காணப்பட்ட அக்கினி ஸ்தம்பமாகிய அந்த இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தை பிலேயாம் காணத்தவறினான். அவன் அந்த பாவப் பரிகாரத்தைக் காணத் தவறினான். அதைப் போன்று புறம்பே தள்ளப்பட்ட அப்படிப்பட்ட ஒரு ஜனத்தை ஒரு பரிசுத்த தேவன் சபிப்பார் என்று அவன் எண்ணினான். ஆனால் அது உங்களுடைய கிரியைகளில் இருக்கவில்லை; அது அதைச் செய்கிற உங்களுடைய விசுவாசமாக உள்ளது. அவர்களிடம் இயற்கைக்கு மேம்பட்டவை இருந்தன. இயேசுவின் காலத்திலும் பரிசேயர்களிடம் அதே காரியம் தான், அவர்கள் இருவருமே அடிப்படை ரீதியாக சரியாயிருந்தனர். ஆனால் தேவன் கிறிஸ்துவோடு இருந்தார். மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் அவரைப் பின்தொடர்ந்தன. 23. இப்பொழுது, ஆதியாகமத்தில் மேலே வந்த இந்த இரண்டு கிளைகளுமே ஒரு கட்டத்திற்குள்ளாக வளர்ந்தன, அவைகள் இரண்டுமே வித்தாக இருக்கப் போகின்றன. இன்றும் அவைகள் இங்கே இருக்கின்றன, அதே காரியம் தான், ‘நாங்கள் கன்னிப்பிறப்பில் விசுவாசம் கொண்டு உள்ளோம். நாங்கள் கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் கொண்டு உள்ளோம். நாங்கள் இரண்டாம் வருகையில் விசு வாசம் கொண்டுள்ளோம்’ என்று கூறுகிற நாள் இங்கே இருக்கிறது. ஆனால், சகோதரனே, தேவன் எப்போதுமே இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களோடும் அற்புதங்களோடும் பாளையத்தில் இருப்பதன் மூலமாக தம்மைத்தாமே உறுதிபடுத்துகிறார். தேவன் எப்போதுமே தம்மைத் தாமே அறியும்படி செய்கிறார். அவர் இயற்கைக்கு மேம்பட்டவராக இருக்கிறார், இயற்கைக்கு மேம்பட்டதன் வழியாகவே அன்றி (வேறு) எந்த வழியிலும் அவரால் கிரியை செய்ய முடியாது, அல்லது அவர் எதாகவும் இருக்கவும் முடியாது. நீங்கள் அதைக் காண்கிறீர்களா-? ஓ, நான் அதை எப்படியாக நேசிக்கிறேன். 24. நீங்கள் காயீனுடைய வம்சத்திலிருந்து கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், காயீன் பக்தியுள்ளவனாக இருந்தான். ஆபேல் எவ்வளவு பக்தியுள்ளவனாக இருந்தானோ அந்த அளவு அவனும் பக்தியுள்ளவனாக இருந்தான். ஆபேல் எவ்வளவு உத்தமமாக இருந்தானோ அவ்வளவு அவனும் உத்தமமாக இருந்தான். ஆபேல் எவ்வளவு அடிப்படை ரீதியாக இருந்தானோ அவ்வளவு அவனும் இருந்தான். ஆனால் இங்கே தான் வித்தியாசம் இருந்தது: அவனிடம் வெளிப்பாடு இல்லை. ஆதிமுதற்கொண்டே அது அவ்விதமாகத்தான் இருந்தது. இயேசு கிறிஸ்து மறுரூப மலையிலிருந்து கீழிறங்கி வந்த போது, மத்தேயு 16-ல் கூறினார், அது தான் என்று நம்புகிறேன், அவர், ‘மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்கிறார்கள்?’ என்று கேட்டார். ‘நீர் தீர்க்கதரிசி என்று ஒருவர் சொன்னார், நீர் இன்னார் இன்னார் என்று ஒருவர் சொன்னார்.’ ‘ஆனால் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டார். பேதுரு, ‘நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து’ என்றான். 25.இப்பொழுது, அவர் தம்முடைய சபையை சரியாக அங்கேயே பேதுருவின் மேல் கட்டினதாக கத்தோலிக்க சபை கூறுகிறது. கிறிஸ்து சரியாக அங்கே தம்மில் தாமே அதைக் கட்டினார் என்று புரட்டஸ்டண்ட சபை கூறினது. நீங்கள் வேத வாக்கியத்தில் கவனிப்பீர்களானால், அவர்கள் இருவருமே தவறாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போதும் அதைத் தம்மில் தாமே கட்டவோ பேதுருவின் மேல் கட்டவோ இல்லை. அவர் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள், ‘மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீ ஒரு போதும் ஏதோவொரு வேதா கமப் பள்ளியில் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை, அங்கே அவர்கள் இருவருமே அதன் வழியாகக் கடந்து போகின்றனர். நீ... மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்தில் இருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை அழித்துப்போட முடியாது’ என்றார், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாடாக இருக்கிறது. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அது தான் எப்போதுமே அவருடைய சபையில் இருந்து வந்துள்ளது. அதைத் தான் ஆபேல் கொண்டிருந்தான். அதைத்தான் அப்போஸ்தலர்களும் கொண்டு இருந்தனர். அதைத் தான் நீங்களும் பெற்றிருக்கிறீர்கள். அது தாமே சபையாக உள்ளது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலும், நிரூபணத்திலும் உங்களில் வெளிப்பட்டிருக்கிற அவருடைய குமாரனைக் குறித்த தேவனுடைய ஆவிக்குரிய வெளிப்பாடாக இருக்கிறது. ‘நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங் கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்,’ உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தின் ஒரு வெளிப்பாடு. ஆவிக்குரிய எண்ணம் கொண்ட ஜனங்கள் அதை ஏற்றுக்கொண்டு அதை விசுவாசிக்கின்றனர். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். ‘இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்.’ நாம் அந்த நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 26. காயீனுடைய ஜனங்களைக் கவனியுங்கள். காயீனுடைய ஜனங்கள் சாமர்த்தியமுள்ள ஜனங்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இருந்தனர். காயீனுடைய ஜனங்கள் பக்தியுள்ளவர்களாகவும், பெரிய சபையையும், பெரிய சபைகளையும் உடையவர்களாகவும், கல்வி கற்றவர்களாகவும், பண்டிதர்களாகவும் இருந்தனர். அவர்கள் விஞ்ஞானத்தில் கிரியை செய்யும்படி போனார்கள். அவர்கள் உலோகங்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் வீடுகளைக் கட்டினர். அவர்கள் மகத்தான காரியங்களில் மகத்தான கட்டிடம் கட்டுபவர் களாக இருந்தனர். இன்று அதை நோக்கிப் பாருங்கள். மறுபக்கத்தை நோக்கிப் பாருங்கள், அவர்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாக இருக்கி றார்கள். ஆனால் பேழைக்குள் சென்ற ஜனங்கள் தாழ்மையான விவசாயிகளான ஜனங்களாக இருந்தனர். சரி. ஆனால் தேவனுடைய உண்மையான பக்கமானது இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தலாக இருக்கும் போது, மறுபக்கத்தில் அறிவு சார்ந்த எண்ணத்தைப் பெற்றிருக்கின்றனர், எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாக அல்ல, ஆனால் ஆவிக்குரிய விதமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் மூலமாக. ஓ, அவருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. தேவன் ஒரு தனிப்பட்ட நபருக்கு தம்மைத் தாமே வெளிப்படுத்தி, துரிதமாக அவர் அவனுக்குள்ளே தெய்வீகத்தை உண்டாக்குகிறார். அவன் தேவனுடைய ஒரு குமாரனாகவோ அல்லது குமாரத்தியாகவோ இருக்கிறான். ‘இந்த மலையைப் பார்த்து பேசு; சந்தேகப்படாதே, அது தள்ளுண்டு போகும்.’ நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா-? இது தான் அந்த நாள், வரப்போகிற நியாயத்தீர்ப்பு, நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக் கொள்ளும்படியான இடத்திற்குள் அவருடைய ஜனங்களைக் கூட்டிச் சேர்க்கிறார். 27.இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு இடத்திலும் நியாயத்தீர்ப்பு தாக்குவதற்கு முன்பதாக, அங்கே எப்போதுமே ஒரு இயற்கைக்கு மேம்பட்ட காரியம் சம்பவித்தது. நோவா, அவர்கள் ஒரு நீண்ட கால காத்திருப்பு வழியாக வருகின்றனர். அதன்பிறகு அங்கே ஒரு தூதனும், ஒரு தீர்க்கதரிசியும், ஏனோக்கும், மற்றவர்களும் தோன்றி, இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்கள் செய்யப்பட்டன. அவர்கள் உள்ளே சென்றனர். இஸ்ரவேல் புத்திரரைக் கொண்டு வந்ததை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்; அது ஒரு நீண்ட காலமாக இருந்தது, நூற்றுக்கணக்கான வருஷங்கள்; எதுவுமே நடக்கவில்லை, கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருந்த யோசேப்பு மரணமடைந்த முதற்கொண்டு எந்த இயற்கைக்கு மேம்பட்டவைகளும் இல்லாது இருந்தது. ஆனால் நியாயத்தீர்ப்பு எகிப்தை தாக்குவதற்கு சற்று முன்பதாக, தேவன் தம்முடைய சபையை வெளியே கொண்டு வந்த போது, அங்கே ஒரு செய்தி இருந்தது, ஒரு தீர்க்கதரிசி தோன்றினான், தூதர்கள் தோன்றினார்கள், இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்கள் சம்பவித்தன; தேவனுடைய பிள்ளைகள் கோசேனுக்குள் பரவி இருந்தனர், அவர்கள் வெளியே வருவதற்கு முன்பாக வாதைகளுக்கு உட்படாமல் அவ்விடத்திலிருந்தனர். 28. அதே காரியம் கிறிஸ்துவின் முதலாம் வருகையிலும் இருந்தது... அழிவு வருவதற்கு முன்பதாக, அவர் அவர்களிடம், ‘வீட்டின் மேல் இருக்கிறவன் இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் அவனுடைய பொருள்களை எடுப்பதற்கு வராதிருந்து, பட்டணத்திற்கு வெளியே இருக்கக்கடவன்’ என்றார். அங்கே தான் அந்த யூதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஈரானிலும் மற்ற இடங்களிலும் இருக்கிறார்கள்; அது எருசலேமிற்குள் திரும்பி வருதல். ஏமாற்றி, திருடி, காரியங்களைச் செய்கிற இந்த யூதர்கள் 144000 பேரில் கூட்டப் படுவதில்லை. ஆனால் தீத்து கோட்டை மதிலை முற்றுகையிட்ட போது, அல்லது எருசலேமை முற்றுகையிட்ட அந்த காலத்தில் அங்கே தப்பின அந்த உண்மையான யூதர்கள் - அவர்களோ (மற்றவர்கள்) பெரும் அழிவுக்குள் சென்றனர், மேலும் எருசலேமும் யூதர்களும் சிதறடிக்கப் பட்டார்கள். சம்பவிக்கும் என்று தேவன் கூறினது நிறைவேறும்படியாக அவர்கள் மீண்டும் சமீப காலத்தில் ஒன்றாகக் கூடி வந்திருப்பது போல (இதற்கு முன்) ஒரு போதும் அவர்கள் (சொந்த தேசத்திற்கு) ஒன்றாகக் கூடி வந்திருக்கவில்லை. நண்பர்களே, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். 29. கவனியுங்கள். செய்தியாளன் வருகிற ஒவ்வொரு தடவையும், எப்போதுமே செய்தியாளன் சபையால் புறக்கணிக்கப்பட்டான். இப்பொழுது, நீங்கள் பின்னால் வரலாற்றினூடாகச் சென்று அதைக் கண்டுகொள்ளுங்கள். தேவன் எப்பொழுதும் எந்தக் காலத்திலும் ஒரு செய்தியை அனுப்பி, ஆனால் சபையானது அதைப் புறக்கணிக்காத ஒரு நேரம் ஒரு போதும் இருந்ததே இல்லை. அது உண்மை. மார்டின் லூத்தரையும் ஜான் வெஸ்லியையும் கவனியுங்கள். அமிஸ் ஜனங்களாகிய நீங்கள், மென்னோனைட் சகோதரர்களாகிய உங்களைக் குறித்து என்ன? செய்தியானது புறப்பட்டு வருகிற போது, சபை அதைப் புறக்கணிக்கிறது. நிச்சயமாக அது புறக்கணிக்கிறது. நாம் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வருகிறோம், எழும்பி வருகிற அந்த சிறு மீதியான கூட்டம் மீண்டும் அந்த வித்து வடிவத்திற்குள் வருகிறது. ஓ, அவருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. நாம் முடிவில் இருக்கிறோம். அது சரியே. நியாயத் தீர்ப்பானது... நீங்கள் நோக்கி சுவரின் மேல் எழுதப்பட்ட கையெழுத்தைப் பார்க்க முடியும். ஒவ்வொரு தடவையும் செய்தியாளன் புறப்பட்டுச் சென்று, அன்பு, கிருபை மற்றும் விடுதலையின் ஒரு செய்தியைக் கொண்டு வந்தான். தேவனுடைய செய்தியானது எப்போதுமே நியாயத் தீர்ப்பிற்கு முன்பாக விடுதலையின் செய்தியாக இருந்து வந்துள்ளது. நோவா விடுதலையின் செய்தியைக் கொண்டிருந்தான். லோத்து விடுதலையின் செய்தியைக் கொண்டிருந்தான். அது விடுதலையின் செய்தியாக இருந்த போதிலும், ஜனங்கள் அதைப் புறக்கணிக் கின்றனர். அது இரக்கம் மற்றும் விடுதலையாக இருக்கிறது, ஜனங்களோ அதைப் புறக்கணிக்கின்றனர். 30. நீங்கள் லோத்தின் நாட்களைக் கவனிக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறேன். அதன் காரணமாகத்தான் எந்த ஏவுகணையாவது எப்பொழுதாவது பூமியைத் தாக்கி அதை வெடிக்கச் செய்யும் முன்பாகவே சபையானது போய் விடும் என்று நான் விசுவாசிக்கி றேன். நான் ஒரு வேதசாஸ்திரி அல்ல. என்னால் அதிகமாக வாசிக்க முடியாது, ஏனெனில் எனக்குக் கல்வி கிடையாது. முன்னடையாளம் என்னவாக இருந்தது என்பதை நான் கவனித்தேன். என்னுடைய நிழலானது எதைப் போன்று காணப்படுகிறது என்பதை நான் காண்பேனானால், நான் எதைப் போன்று தோற்ற மளிப்பேன் என்ற ஏதோவொரு கருத்தை நான் கொண்டிருப்பேன். நோவா பேழைக்குள் போகுமட்டுமாக ஒரு துளி மழையும் பெய்ய முடியவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா? மேகங்கள் தொங்கிக் கொண்டிருந்தன, இடியும் மின்னலும் முழங்கிக் கொண்டு இருந்தன, ஆனால் நோவா உள்ளே போகும் மட்டுமாக மழை பொழியவேயில்லை. தூதன் லோத்திடம், ‘நீ அங்கே போய் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது’ என்றான். எந்த அக்கினியும் விழ முடியவில்லை. லோத்து வெளியே போகுமட்டுமாக வானங்களில் தொங்கிக் கொண்டிருந்த கந்தகத்தின் ஒரு துளியும் ஒரு போதும் சோதோமில் விழ முடியவில்லை; அது சரியே. இயேசு, ‘அப்போது சம்பவித்தது போலவே, மனுஷகுமாரனுடைய வருகையிலும் நடக்கும்’ என்றார். நிச்சயமாக. ஒரு ஏவுகணையானது நியாயத்தீர்ப்பில் இந்த பூமியைத்தாக்கும். தாக்கும் முன்பதாக, இந்த இரவுகளில் ஒன்றில், அல்லது காலைகளில் ஒன்றில், அல்லது ஏதோவொரு சமயத்தில் சபையானது வீட்டிற்கு போவது சம்பவிக்கும். நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே சபையானது வீட்டிற்குப் போய் விடும். நீங்கள் நியாயத்தீர்ப்பை காணக் கூடிய அளவுக்கு அது மிகவும் நெருக்கமாக தொங்கிக் கொண்டிருந்தால், சுவரின் மேலோ அல்லது வானத்திலோ கையெழுத்து... அவர்கள் அந்த செயற்கைக் கோள்களில் அடையக் கூடிய இடத்தில், இரண்டு அல்லது மூன்று வெடிகுண்டுகள் முழு காரியத்தையுமே முடிவுக்கு கொண்டு வந்து விடும். அவர்கள் விரும்பினால், அவர்களால் இன்றைக்கே அதைச் செய்ய முடியும். நாம் அதைக் காண்கிறோம். இயேசு எவ்வளவு அதிகமாக இதே மணி வேளையில் வந்து அவருடைய சபையை எடுத்துக் கொண்டு போக முடியும். அவருடைய வருகையைத் தவிர வேறொரு காரியமும் விடப்படவில்லை... அது சரியே. நாம் உட்கார்ந்து, ‘நல்லது, அது... நல்லது, இதற்கு முன்பாக அதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று சொல்வோமானால். பாருங்கள், புறக்கணித்து விட்டார்கள். 31.இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்படியே... லோத்தின் காலம். தேவன் இவ்வுலகத்தை அக்கினியினால் சுட்டெரிப்பார். அவர் அதைக் கூறியுள்ளார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்-? அவர் அதைச் செய்வார். வேறொரு சமயம் சோதோம் கொமோராவில் பூமியானது சுட்டெரிக்கப் பட்டதற்கு சற்று முன்பாக இருந்த தூதனுடைய இயல்பை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் சோதோம் கொமோராவின் ஒழுக்கத்தைக் கவனித்து, அதை ஐக்கிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். சற்று அதை ஒப்பிட்டுப் பாருங்கள்: விவாகரத்துக்கள், கல்வி, ஒழுக்கக்கேடு. நீங்கள் அதைப்பார்த்தீர்களா.? 32. இப்பொழுது, என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். தேவனுக்கு மீதியான ஒரு கூட்டம் இருந்தது. அது அங்கே வெளியே உட்கார்ந்து கொண்டிருந்த ஆபிரகாமாக இருந்தது. மேலும் கவனியுங்கள். தூதர்கள் சென்று சோதோமை விட்டு வெளியே வரும்படி லோத்திடம் கூறி, அவன் விரும்பின யாவும் அல்லது அவனைப் பின்பற்றி வரும்படி அழைக்க முடிந்த யாவும் சோதோமை விட்டு வெளியே வரும்படி கூறினார்கள். அவர்கள் சுட்டெரிக்கப்படப் போவதாக இருந்தனர். லோத்து இராமுழுவதும் தெருவினூடாகச் சென்று, அவனால் எவ்வளவு கடினமாக பிரசங்கிக்கக் கூடுமோ அவ்வளவு கடினமாக அவனுடைய குடும்பங்களிடமும் மற்றும் எல்லா இடங்களிலும் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவர்கள் என்ன கூறினார்கள் என்பதைக் கவனியுங்கள். அவன் பரியாசம் பண்ணுகிற வனைப் போன்று அவர்கள் அவனிடம் பேசினதாக வேதாகமம் கூறுகிறது. இப்பொழுது இன்றைய நாளைக் கவனியுங்கள். இன்று செய்தியைக் குறித்து அவர்கள் என்ன கூறுகின்றனர்-? ‘ஓ, அது ஒரு நடிகரின் வேடம் (makeup). அது ஒரு போலியான காரியம். நீங்கள் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிக்கிறீர்கள். நீங்கள் எங்களில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க முயற்சிக் கிறீர்கள். அது ஒரு கேலிக்கூத்து.’ அது பரிசுத்த ஆவி, நீங்கள் அதைக் காண்பதற்கு மிகவும் குருடாயிருக்கிறீர்கள். நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, அது வேதப்பூர்வமானதா-?’ என்று கேட்கலாம். நீங்கள் அதைப் பொறுத்துக் கொள்வீர்களானால், நாம் சற்றே கொஞ்சம் ஆழமாகப் போகலாம். சோதோமுக்கு வந்த இரக்கத்தின் தூதனைக் கவனியுங்கள், அந்த சோதோம் தான் சுட்டெரிக்கப்படப் போவதாக இருந்தது. அது இன்று சம்பவிக்கும் என்று அவர் சொன்ன பாணியைப் போல. 33. தூதன் ஒரு மனித ரூபத்தில் ஆபிரகாமிடம் வந்தார். ஆபிரகாம் ஆவிக்குரிய விதமாக அவனை அடையாளம் கண்டு கொண்டான். அவர் தம்முடைய முதுகு கூடாரத்தின் பக்கமாக இருக்கும்படி உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை போஷித்தான். அவர், ‘ஆபிரகாமே, நான் ஏறக்குறைய அதே சமயம் - ஏறக்குறைய ஒரு உற்பவ காலத்திட்டத்தில் உன்னை சந்திக்கப் போகிறேன்’ என்றார். ஆபிரகாமுக்கு 100 வயதாக இருந்தது. சாராளுக்கு 90 வயது. அவர்கள் அந்த வாக்குத்தத்தத்திற்காக வருடாவருடங்களாக வருடா வருடங் களாக எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். கர்த்தருடைய வருகைக்காக எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்தரம் உண்டாவதாக. ஒரு உலோகத்துண்டு ஒரு காந்தத்திடம் இருப்பது போல அவர்கள் ஏதோ ஓன்று சம்பவிப்பதற்காக எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அது சம்பவிப்பதற்காக அவர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். தேவன் செய்திருந்த வாக்குத் தத்தத்திற்காக ஆபிரகாம் எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான். 34. காலம் சமீபமானது. ஒரு மனிதர் வந்தார்; அது ஒரு மனிதனல்ல; அது ஒரு தூதன். சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு மனிதனில் வெளிப் பட்டதைக் காட்டிலும் அந்த தூதன் வேறு யாருமல்ல. இப்பொழுது, வேதாகமம் வாசிப்பவர்களாகிய நீங்கள் கவனியுங்கள். ஆபிரகாம் அவருடைய பெயரை ஆண்டவர் என்று அழைத்தான். அந்த ‘ஆண்டவர் (Lord) என்பதை எடுத்துக் கொண்டு, அது ஏலோகீமா என்று பாருங்கள், சர்வவல்லமை உள்ள யேகோவா ஒரு மனிதனின் வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு, தம்முடைய முதுகைக் கூடாரம் பக்கமாகத் (திருப்பிக் கொண்டு) உட்கார்ந்திருந்தார். அவர், ‘நான் ஏறக்குறைய சாராளுக்காக ஒரு உற்பவகாலத் திட்டத்தில் உன்னைச் சந்திக்கப் போகிறேன்’ என்றார், (அவளுக்கு) 90 வயது. சாராள் என்ன செய்தாள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மனிதர் தம்முடைய முதுகைத் திருப்பினவராக இருக்க, கூடாரத்தின் உள்ளே சாராள் தன்னுடைய இருயத்தில், சத்தமாக அல்ல, அவளுடைய இருதயத்தில், கூடாரத்தினுள்ளே, அம்மனிதர் அதற்கு தம்முடைய முதுகைத் திருப்பினவராயிருக்க சாராள் தன்னுடைய இருதயத்தில் நகைத்தாள். தூதன் ஆபிரகாமைப் பார்த்து, ‘சாராள் ஏன் நகைத்தாள்?’ என்று கேட்டார். 35. அது என்னவிதமான, மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிவதாக (mental telepathy) இருந்தது-? உங்களுக்கு வெட்கமில்லையா-? அதே இரக்கத்தின் தூதனானவர் தான் ஒவ்வொரு இரவும் இந்தக் கட்டிடத்திற்குள் வந்து, அதே காரியங்களை நடப்பிக்கிறார். இது அக்கினியும் அழிவும் இந்த பூமியைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக சம்பவிக்கிறது. ‘லோத்தின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.’ ஒரு கூடாரத்தினுள்ளே அவருக்குப் பின்னால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதைப் பகுத்தறியக்கூடிய ஒரு செய்தியுடன் கூடிய ஒரு தூதனாக அது இருந்தது. சாராள் வெளியே வந்து அதை மறுக்க முயன்றாள். ‘ஆம், ஆனால் நீ அதைச் செய்தாய்’ என்றார், அவருடைய முதுகு திரும்பினவாறிருக்க, கூடாரத்தினுள்ளே சாராள் அவளுடைய இருதயத்தில் அதை செய்தாள். அந்த ஆவியின் இயல்பை உங்களால் காண முடியவில்லையா-? அந்த அதே ஆவி இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறல்ல. அவர் கர்த்தராகிய இயேசு இயேசுவின் வடிவில் இங்கே பூமியில் அச்சரீரத்தில் இருந்த போது, அவர் அதே காரியத்தைச் செய்தார். அது அவர் தான் என்று நிரூபிப்பதற்காக அவர் அதே அடையாளங்களை நடப்பித்தார். அக்கினி மற்றும் அழிவுக்கு முன்பதாக இன்று மற்றும் இன்றிரவில் அவர் அதே காரியங்களை நடப்பித்துக் கொண்டு இங்கே பூமியின் மேல் இருக்கிறார். ஜனங்கள், ஏன், ‘நீ - நீ கிண்டல் செய்து கொண்டிருக்கிறாய். நீ அந்தி கிறிஸ்து. நீ வேடிக்கை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாய். நீ ஆள்மாறாட்டம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாய். நீ வித்தியாசமாய் இருக்க விரும்புகிறாய். அது மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிவது தான். அது ஒரு நாகரீகமான குறி சொல்பவன்,’ என்று கூறுகிறார்கள். இயேசு, ‘அதற்கு விரோதமான ஒரு வார்த்தையும், அது இம்மையிலோ அல்லது மறுமையிலோ ஒரு போதும் ஒரு மனிதனுக்கு மன்னிக்கப் படாது’ என்றார். 36. எப்படியாயினும் தேவன் என்ன செய்கிறார், ஜனங்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, செய்தியானது தொடர்ந்து செல்ல வேண்டும். அதற்குப்பிறகு அவர்கள் ஒருபோதும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை; அவர்கள் அதை நோவாவின் காலத்தில் ஒரு போதும் ஏற்றுக் கொள்வில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவினுடைய நாட்களிலும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அவர்கள் இன்றும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது சரியே. ஆனால் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக அவருடைய எச்சசரிக் கையை கொடுப்பதற்கு பிதாவிற்கு அது ஏற்றதாய் இருந்தது. சோதோமியர் உயிர்த்தெழும்போது, அவர்கள் என்ன சொல்லுவார்கள். லோத்து தெருக்களின் வழியாகப் போன போது... நீங்கள், ‘லோத்தா?’ என்று கேட்கலாம். அவர்களுடைய பாவங்கள் அவனுடைய நீதியுள்ள ஆத்துமாவை நாள்தோறும் வாதித்தது என்று வேதாகமம் கூறுகிறது. நிச்சயமாக அவன் அவ்வாறு இருந்தான். தூதர்கள் அவனை அபிஷேகித்து சுவிசேஷத்துடன் அவனை வெளியில் அனுப்பினர். 37.ஓ, சகோதரனே, நாம் ஜீவித்துக்கொண்டிருப்பது என்னவொரு நாள். இந்த நாளில், ‘ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி, பின் நாட்களில், அவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி, துணிகரம் உள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவ பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும் இருப்பார்கள்’ என்று 2 தீமோத்தேயுவில் வேதம் கூறுகிறது. நான் அன்றொரு இரவில் சபைக்கு வந்தேன்; அது முற்றிலுமாக மிகவும் பனிமிகுந்ததாயும், இங்கே வருவதற்கு மோசமானதாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் கூடைப்பந்து விளையாட்டை கொண்டிருந்தனர், அவர்கள் நூற்றுக்கணக்கானவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டி யதாயிருந்தது. அது என்ன? அவர்களுடைய தேவன் கூடைப்பந்து தான். அப்படியானால் உங்களுடைய தேவன் யார்? பெரிய அளவில் வெடித்து அழிக்கும் ஒரு பகுதி காற்று தான். நம்முடைய தேவன் வானங்களையும் பூமியையும் உண்டாக்கின உண்மையான ஜீவனுள்ள ஒரு சிருஷ்டிகராக இருந்து, அவருடைய உயிர்தெழுதலினுடைய தம்முடைய தன்மையில் உள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருப்பதற்காக நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஆனால் அவர்கள் அதைக் காணத்தான் விரும்புகிறார்கள். அவர்களிலுள்ள அவ்வகை யான ஆவி அதற்காக (அவர்களை) இழுக்கிறது. ஒரு கிறிஸ்தவனில் உள்ள ஆவி கிறிஸ்துவிடம் அவனை இழுக்கிறது. ‘என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளவிட்டால், அவனால் எப்படி என்னிடம் வர முடியும்.’ 38. ஓ, ஆமாம். சகோதரனே, நான் இதைக் கூறுகிறேன். துரிதமாகத் தப்பித்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு அதிக நேரம் கிடையாது. இந்நாட்களில் ஒன்றில் இந்த மகத்தான பெரிய பழைய சபை சம்பந்தமான ecclesiastical) சுவர்கள் விழப்போகின்றன. உங்களுக்கு ஒரு தருணமுள்ளபோதே நீங்கள் துரிதமாக ஓடிவிடுவது நல்லது. உலகத்தை விட்டு வெளியே வாருங்கள். கிறிஸ்துவுக்குள் வந்து விடுங்கள். நியாயத்தீர்ப்பின் உஷ்ணமான காற்றானது ஒவ்வொரு பக்கத்திலும் காற்றில் மிதப்பதை நீங்கள் காணும்போது, இப்பொழுது மணிக்கு 1800 மைல்கள் வேகத்தில் சுற்றிலும் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அல்லது மணிக்கு 18000 மைல்கள் வேகத்தில் உலகத்தை சுற்றிலும் சுற்றிலுமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன (swinging). தங்களுடைய கரத்தில் ஒரு பட்டனைக் கொண்டுள்ள ஒரு பாவமுள்ள தேசமானது நம் அனைவரையும் 5 நிமிடங்களில் தூளுக்கு அனுப்ப முடியும்... மகத்தான ஏதோவொன்று வருவதற்கோ, ஒரு மகத்தான எழுப்புதல் வருவதற்காகவோ எதிர் பார்த்திருக்க வேண்டாம்; நீங்கள் கர்த்தருடைய வருகைக்காக எதிர் நோக்கியிருங்கள். இப்பொழுதே ஆயத்தமாயிருங்கள். சாத்தான் மாத்திரமே இந்த காரியங்களைக் காணாதவாறு உங்களுடைய கண்களைக் குருடாக்கிக் கொண்டிருக்கிறான். 39. கிறிஸ்து ஒவ்வொரு தலைமுறையினூடாகவும் ஒவ்வொரு தேசத்திற்கும் தம்மைத்தாமே அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் இன்றும் அதைச் செய்து கொண்டிருக்கிறார். பெயரளவேயான சபைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஆவிக்குரிய சபையோ விழித்துக் கொள்கிறது. நித்திரை செய்யும் கன்னிகை உறங்கச் சென்றிருக்கிறாள், அவள் உபத்திரவ காலத்தின் வழியாகச் செல்லுவாள். ஆனால் தன்னுடைய விளக்கில் எண்ணெயைக் கொண்டிருப்பவள் ஆயத்தமாயிருக்கிறாள். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அந்தக் கன்னிகையின் உவமையை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். வழக்கமாக நாம் வைத்திருக்கிற அந்த பழைய நிலக்கரி எண்ணெய் விளக்குகளை நீங்கள் அறிவீர்கள். நான் உபயோகப்படுத்தினேன்... சிறிது காலத்திற்கு முன்பு வரை நாம் ஒரு போதும் வெளிச்சத்தைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இங்கே கவனியுங்கள். எண்ணெய் விளக்கின் அடியில் இருக்கும். அதை இழுத்துக் கொள்ள அங்கே ஒரு விளக்குத் திரி இருக்கிறது. இப்பொழுது, அந்தத் திரியானது விசேஷமாகச் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பொருளினால் இருக்க வேண்டியுள்ளது. சுடரானது திரியின் முனையில் வருகிறது. இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் அங்கே உள்ளே ஒரு குழாயை வைத்து, அதை இழுக்க முடியாது; இரும்பினால் செய்யப்பட்டதும், மனிதனால் உண்டாக்கப்பட்டதுமான காரியங்கள் வழியாக அது வராது. அது தேவனுடைய அருளப்பட்ட வழியின் ஊடாக மாத்திரமே வருகிறது. திரி என்பது விசுவாசமாகும். பரிசுத்த ஆவியை ஒரு-ஒரு விளக்கினுள் இழுக்கக்கூடிய ஒரே காரியம் என்னவெனில், பரிசுத்த ஆவியே தான். நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை பெற்றுக்கொண்டு, அதனுடைய ஒரு முனை தேவனுடைய மகிமைக்காக சுடரிலும், மறுமுனையானது தேவனுடைய பரிசுத்த ஆவியின் எண்ணெயிலும் மூழ்கி இருக்கும் போது, நான் இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அங்கே ஒரு பிரகாசமான வெளிச்சம் இருக்கப் போகிறது. அது சரியே. ஆனால் எண்ணெயோடு தண்ணீர் கலந்திருந்து, அதில் நீங்கள் அதை அமிழ்த்தினால், என்னவாக இருக்கும்-? அது என்ன செய்யும் என்று உங்களுக்குத் தெரியுமா-? அது அணைந்து போகும்படியான சத்தத்தை எழுப்பும். இன்று அநேகருடைய தீவட்டிகளோடுள்ள காரியம் அது தான். அவைகள் நெருப்பு அணைந்து போகும் போது ஏற்படும் ஒலியை (sputtering) எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதன் மேல் முனையில் கரி உண்டாகிறது, நீங்கள் எழும்பி உங்களுடைய தீவட்டிகளை வெட்டி சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. தீவட்டிகளை வெட்டி சுத்தப்படுத்துவதற்கான ஒரு நேரம் எப்பொழுதாவது இருக்குமானால், அது இப்பொழுது தான். ‘தீவிரமாய் அங்கே ஓடிப் போ; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது.’ 40. இப்பொழுது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு மிகவும் சமீபமாய் இருப்பதை நாம் காண்போமானால்... மேலும் ஞாபகம் கொள்ளுங்கள், நான் நியாயத்தீர்ப்பின் விளிம்பில், உங்களுக்கு முன்பாக நின்று, நான் சொல்லியிருக்கிற இந்தக் காரியங்களை நீங்கள் காணும் போது... அந்த நேரம் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு இரவும், இயேசு கிறிஸ்து தாம் பூமியில் நடந்த போது இருந்த தம்முடைய மனித சரீரத்திற்கு வெளியே தாம் பிரத்தியட்சமான ஒவ்வொரு வடிவிலும் இங்கே பிரத்தியட்சமாகுகிறார் (appears). அவர் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். அவர் சரியாக பெந்தெகோஸ்தே நாளில் செய்த விதமாக, அன்றொரு இரவில் சரியாக இங்கே 500 பேர்களுக்கு முன்பாக வந்தார். ஒரு இடிமுழக்கமானது வானத்திலிருந்து முழங்கத் தொடங்கி, ஒவ்வொருவரும் நோக்கிப்பார்க்கத் தொடங்கின போது, ஒரு மகத்தான இடிமுழக்கத்தைப் போன்று இங்கே அது வந்து, இங்கே மேடையின் மேல் விழுந்து, கட்டிடத்தின் மேல் முழங்கினது. காற்று அடிக்கவில்லை, ஆனால் காற்று அடிக்கிற முழக்கம் போல இருந்தது. நாம் என்ன செய்தோம்-? நம்முடைய இருதயங்கள் பட்டணத்தைச் சுற்றிலும் கொழுந்து விட்டு எரிவதற்குப் பதிலாக, நாம், ‘அது பாராட்டத்தக்க விதத்தில் நன்றாக இருந்தது, ஆம், அதைக் குறித்து என்னுடைய மனதில் சந்தேகமேயில்லை’ என்று கூறினோம். ஓ, எழுந்து, உங்களுடைய தீவட்டிகளை வெட்டி சுத்தப்படுத்துங்கள் (trim). நீங்கள் மிக அதிகமான எண்ணெயை உங்களுடைய ஆவியோடு, அல்லது மிக அதிகமான தண்ணீரோடு கலந்து விட்டீர்கள். அது கரியை உண்டாக்கும், மேலும் உங்களுடைய விளக்குகள் அணைந்து, உங்களுடைய விளக்கினுடைய சிம்னி (chimney) புகைந்து கொண்டிருக்கும். தேவனுடைய இராஜ்யம் சமீபமாய் இருக்கும் போது, உங்களால் அதைக் காண முடியாது. நாம் இப்பொழுது முடிவில் இருக்கிறோம், எழுந்து உங்களுடைய விளக்கை சுத்தப்படுத்திக் கொண்டு (trim your lamp) நாம் போய்க் கொண்டிருப்போம். 41.நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா-? இந்த உலகமானது அதனுடைய பெரும் பேரழிவை சந்திப்பதற்கு முன்பாக, (அது வரும் என்று வேதவாக்கியத்தில் முன்னுரைக்கப் பட்டுள்ளது) தேவன் தம்முடைய இரக்கத்தால் தம் சபையை அதை விட்டு எடுத்துக் கொள்வார் என்பது நினைவிருக்கட்டும். ஏனெனில் ஒரு சிறு உபத்திரவமும் தாக்கும் போது, சபையானது இங்கே இருக்காது. 42. கவனியுங்கள், நோவா... லோத்தை அழித்துப் போடுகிற ஏதோ ஓன்றை விட்டு லோத்து வெளியே வந்தான். நோவா தன்னைப் பாதுகாக்கிற ஏதோவொன்றுக்குள் சென்றான். அப்படியானால், (அது இரண்டும்) ஒன்று சேர்ந்து என்னவாக இருக்கிறது-? அதை ஒன்றாகச் சேருங்கள். நாம் உலகத்தை விட்டு வெளியே வந்து, (நாம் அதனோடு அழிந்து போயிருப்போம்), கிறிஸ்துவுக்குள் போகிறோம், நம்மை பாதுகாக்கக்கூடிய ஒரே காரியம் அது தான். நோவா உள்ளே போனான், லோத்து வெளியே வந்தான். அவன் உலகத்தை விட்டு வெளியே வந்தான், சோதோமை விட்டு வெளியே வந்தான். மேலும் நோவா நியாயத்தீர்ப்புகளின் மேலாக மிதந்து சென்ற பேழைக்குள் சென்றான். சகோதரனே, ஒரே காரியம் என்னவெனில், ஒரு தடவை அல்ல, எந்த காலத்திலும் கிறிஸ்து மகத்தான ஜனங்களை அல்லது அதைப் போன்ற மகத்தான காரியங்களை அழித்த போது, அவர் முதலில் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அங்கிருந்து எடுத்துக் கொள்கிறார், ஏற்கனவே பரிபூரணமாக இருப்பதாக தேவனால் அறிவிக்கப்பட்ட ஒரு சபையின் மேல் அவர் எங்ஙனம் நியாயத் தீர்ப்பை ஊற்ற முடியும்? நாம் கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறோம். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால், நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத் தத்தத்தின்படி சுதந்தரராயும் இருக்கிறோம். அவர் ஏற்கனவே நம்மை கிறிஸ்துவில் நியாயந்தீர்த்திருக்கும் போது, தேவன் எவ்வாறு நம்மை நியாயந்தீர்க்க முடியும்-? 43. நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், கிறிஸ்து, ‘அவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்’ என்றார். அதே கிரியைகள். ‘நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்.’ வெட்டியெடுக்கப்பட்ட கிளைகள், ஏதோவொரு ஸ்தாபன புழுவானது ஊடுருவிச் செல்கிறது - அது ஓடி ஜீவ ஓட்டத்தைத் தடை செய்கிறது, அந்தக் கிளையானது வாடி உலர்ந்து போய், சுட்டெரிக்கப்படும். ஆனால் ஒரு நல்ல ஆரோக்கியமான திராட்சச்செடி அல்லது கிளையானது திராட்சச் செடிக்குள் பரவினதென்றால், அந்த திராட்சச்செடி - அந்த கிளையானது அந்த திராட்சச்செடிக்குள் இருந்த அதே வகையான ஜீவனைப் பிறப்பிக்கும். அது ஒரு பீச் மரத்தினுடைய கொடியாக இருந்தால் அது பிறப்பிக்கும். அந்த பீச் மரத்தின் கிளையானது பீச் பழங்களைப் பிறப்பிக்கும். அது ஒரு திராட்சச் செடியின் கொடியாக இருந்தால், அது திராட்சப் பழங்களைப் பிறப்பிக்கும். அது ஒரு பூசணிக்காயாக இருந்தால், அது பூசணிக்காய்களைப் பிறப்பிக்கும். அது ஒரு தர்பூசணியாக இருந்தால், அது தர்பூசணிப் பழங்களைப் பிறப்பிக்கும். அதனுள் இருக்கும் ஜீவனே அது என்னவென்பதை நிரூபிக்கிறது. 44. நீங்கள் ஏதோவொரு மனிதனால் உண்டாக்கப்பட்ட அமைப்பை (organization) சுற்றிலும் இருந்து, உங்களை நீங்களே... என்று அழைக்க முடியும் என்று என்னிடம் கூறுகிறீர்கள். நான் உங்களிடம் ஒன்றைக் கூறட்டும். எந்த நேரத்திலோ அல்லது எந்த காலத்திலோ தேவன் ஒரு போதும் ஒரு அமைப்பை எப்போதுமே ஏற்றுக் கொண்டதே கிடையாது. வரலாற்றில் ஒரு இடத்திலாவது (அப்படியிருந்தால்) எனக்குக் கூறுங்கள். அங்கே எப்போதும் இருந்ததிலேயே கத்தோலிக்க சபை தான் முதலாவது ஸ்தாபிக்கப்பட்ட சபையாகும். வெளிப்படுத்தின விசேஷம் 17:17 என்ன கூறுகிறது-? அவள் ஒரு – ஒரு வேசியாக இருந்தாள். அவளுக்கு அநேக குமாரத்திகள் இருந்தனர். புரட்டஸ்டண்ட் சபையானது சரியாக கத்தோலிக்க சபைக்கு வந்து தங்களைத் தாங்களே ஸ்தாபித்துக் கொண்டு திரும்பிச் சென்று, வேலி கோடுகளை வரைந்து, ‘நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், வேறு எதையும் அல்ல’ (என்கின்றனர்). போய் விட்டனர், ஆடுகளுக்கு புல் மேய இடமேயில்லை. உங்களுடைய அமைப்பிற்கு விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது, ஆனால் நீங்கள் உங்களைத் தானே தொழுவத்தில் அடைத்துக் கொண்டிருக்கிறீர்கள், மனிதர்களையும் ஸ்திரீகளையும் அடைத்து வைத்து, ‘என்னுடைய குழுவிற்கு அதெல்லாம் தெரியும்’ என்று எண்ணுகிறீர்கள். தேவன் உங்களுடைய கூட்டத்தாருக்கு அறிந்து கொள்ளச் செய்வதைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் எதையும் அறிந்து கொள்ள மாட்டார்கள். மேலும் அது... இயேசு ஒரு போதும் மெதொடிஸ்டுகளுக்காகவோ, பாப்டிஸ்டுகளுக்காகவோ பெந்தெகோஸ்தேயினருக்காகவோ மரிக்கவில்லை. அவர் முழு சரீரத்திற்காகவும் மரித்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படுத்துவது தான் உலகளாவிய தரிசனமாக உள்ளது. என் அன்பு நண்பர்களே, என்னுடைய ஜெபம் என்னவெனில்... நீங்கள் செய்கிற ஒவ்வொரு சிறிய அசைவையும் இயேசு காண்கிறார்; நீங்கள் செய்கிற ஒவ்வொரு சிறிய செயலையும் அவர் அறிகிறார். 45.கொஞ்ச காலத்திற்கு முன்னால், இராணி அல்லது இராஜா, சரியாகச் சொன்னால், இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னர், அவருடைய மரணத்திற்கு முன்பு, கனடாவிற்கு வந்தார். அவர் அங்கு வந்த போது, ஆசிரியர் எல்லா பிள்ளைகளையும் வெளியே அனுப்பி வைத்தார், ஆகவே அவர்கள் போய் சிறிய பிரிட்டிஸ் கொடிகளை அசைத்து காண்பிக்கும்படியாக அவைகளை அவர்களுக்குக் கொடுத்தனர், அந்த மன்னர் அங்கே இருந்ததற்காக அவர்கள் மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய சிறிய கொடிகளோடு தெருக்களில் சுற்றிலும் குழுமியிருந்தனர், அந்த மன்னர் தம்முடைய அழகான இராணியோடு தெருவில் வந்தார், அவர்கள் கடந்து போகும் போது, ஜனங்கள் கண்ணீர் விட்டனர், ஒவ்வொருவரும் தங்களுடைய கொடிகளை அசைத்து, களிகூர்ந்தனர். அந்த மன்னர் கடந்து போன பிறகு, அந்த பிள்ளைகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று எண்ணினர். ஒரு சிறுமியைத் தவிர, அவர்கள் அனைவரும் திரும்பி விட்டனர். ஆசிரியரால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் வெளியே தெருவில் போனாள். அவள் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் நோட்டமிடத் தொடங்கினாள். சிறிது கழிந்து, அவள் ஒரு தந்தி கம்பத்தின் அருகில் நின்று கொண்டு, அவளுடைய சிறிய தலையை கம்பத்தில் வைத்துக் கொண்டு, அவளால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு சத்தமாக அழுது கொண்டிருந்தாள்... ஆசிரியர் அவளிடம், ‘அன்பே, என்ன விஷயம்? நீ - நீ அந்த மன்னரைப் பார்த்து உன்னுடைய கொடியை அசைக்கவில்லையா-?’ என்று கேட்டாள். அவள், ‘ஆம், மன்னரைப் பார்த்து என் கொடியை அசைத்தேன்’ என்றாள். அவள், ‘நீ அருகில் நின்றாயா-?’ என்று கேட்டாள். ‘ஆம், நான் அருகில் நின்றேன்.’ நல்லது, ‘நீ மன்னரைக் கண்டாயா-?’ என்று கேட்டாள். அவள், ‘ஆம், நான் மன்னரைக் கண்டேன்’ என்றாள். நல்லது, ‘நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்-?’ என்று கேட்டாள். ‘அந்த மன்னர் என்னைப் பார்க்கவில்லை. நான் மிகவும் சிறியவளாய் இருக்கிறேன்; அவரால் என்னைப் பார்க்க முடியவில்லை’ என்றாள். 46. ஆனால் அது கிறிஸ்துவோடு அவ்வாறு இல்லை. நீங்கள் கல்வி கற்றிருந்தாலும், நீங்கள் அணிவதற்கு அரிதாகவே துணி மணிகளைப் பெற்றிருந்தாலும் காரியமில்லை, நீங்கள் அவரிடம் எடுத்து வைக்கிற ஒவ்வொரு சிறிய அசைவையும் அவர் காண்கிறார், அவர் அதை அறிகிறார். பரிசுத்த ஆவியானவர் உன்னை சிலுவைக்கு சமீபமாய் கொண்டு வர நீ ஏன் இன்று அனுமதிக்கவில்லை-? நீ ஏன் இன்று ஆயத்தமாயில்லை-? ‘நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.’ அவர் சீக்கிரமாய் பிரத்தியட்சமாவதை (appearing) நிரூபிக்கும் ஒவ்வொரு அடையாளத்தையும் நாம் காண்கிறோம். நாம் அதைக் குறித்து சிந்திக்கையில் நம்முடைய தலைகளை ஒரு கணம் தாழ்த்துவோம். ‘சகோதரன் பிரன்ஹாமே, இங்கிருந்து வெளியேறும் போது ஜெபிக்கிற இந்த ஜெபத்தில், நீர் ஜெபிக்கும் போது, உம்முடைய ஜெபங்களில் என்னை நினைவு கூரும். நீர் என்னை நினைவு கூரும்படி நான் விரும்புகிறேன், நான் கர்த்தருக்கு அருகாமையில் வருவேன். நான் அவருடைய குமாரனாகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட வாஞ்சிக்கையில், நான் அவருக்காக எப்போதாவது செய்யக்கூடிய என்னுடைய சிறிய கிரியைகளில், அந்த நாளில் அவர் அதைக் கண்டு, எனக்கு அதை நீதியாக எண்ணுவார்’ என்று சற்று முன்பு யார் கூறினார்களோ என்று வியப்படைகிறேன். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா-? கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியே, இந்த இடமெங்கிலும். பால்கனியில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய இடது பக்கத்தில், ஆம். சரி, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே மேலே பால்கனியின் இடது பக்கத்தில் இருக்கிற உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. நல்லது. 47. சரி, அவர் இங்கே இருக்கிறார்... அது இப்பொழுது உங்களைப் பொறுத்தது. என்ன-? துரிதமாக. செய்தியானது எப்போதுமே அவசரமானதாக இருக்கிறது. வேகமாக, துரிதமாக. எந்த தூதன்-? நீங்கள் இங்கே காண்கிற அதே தூதன். பரிசுத்த ஆவியானவர் இங்கே ஒவ்வொரு இரவும் வந்து, ஆபிரகாமின் கூடாரத்தில் அவர் செய்த அதே காரியத்தையே அவர் நடப்பிக்கிறார் என்பதை தலைகளைத் தாழ்த்தியுள்ள உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்-? உங்களுடைய கரங்களைப் பார்க்கட்டும். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அப்படியானால் செய்தி என்பது என்ன-? அவருடைய செய்தி என்னவாக இருந்தது-? தீவிரமாக இங்கிருந்து வெளியே போ. ஏன், இந்தப் பெரிய ஸ்தாபன மதில்களை விட்டு வெளியே போங்கள். நீங்கள் சுற்றிலும் நின்று கொண்டிருக்கிற இந்த பாவத்தின் மதில் சுவர்களை விட்டு தப்பிச் செல்லுங்கள். இந்தப் பழைய ஒழுக்கங் கெட்ட தொலைக்காட்சி நாடகக்காட்சிகளையும், இந்த எல்லா செய்தித்தாளின் சரக்குளையும், இந்த எல்லா ‘உண்மை விவர’ பத்திரிகைகளையும் விட்டு வெளியே வாருங்கள். இந்த எல்லா நாஸ்தீகர்களையும் விட்டு வெளியே வாருங்கள். ‘அது மனதிலுள்ள வைகளை அறியும் கலையாக (telepathy) இருக்கக்கூடுமோ என்று வியப்படைகிறேன்-? அது இதுவாக இருக்கக்கூடுமோ என்று வியப்படைகிறேன்-?’ தீவிரமாக அவைகளை விட்டு வெளியே வாருங்கள். வெளியே வந்து, கிறிஸ்துவினுடைய இரக்கத்தின் நடுவில் ஓடுங்கள். உங்களுக்கான நீரூற்றின் இடமாக சிலுவை உள்ளது. அதைக் குறித்து சிந்தியுங்கள், நாம் ஜெபிக்கிற வேளையில், விசுவாசத்தினாலே அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். 48. பரலோகப் பிதாவே, தேவகுமாரனே. எங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இராஜாவின் வருகையின் நிழலில், நாங்கள் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த தீங்கான கடைசி நாட்களில் நாங்கள் இருப்பதை அறிவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே கிரியைகளை அறிவிக்கும்படியாக நீர் ஒரு தூதனை பூமிக்கு அனுப்பியிருக்கிறீர். ஒரு மனிதனில் அசுத்த ஆவி இருக்குமானால், அவன் தீமையானதைச் செய்வான். அப்படியானால், ‘நல்லது, நான் ஒரு கூட்டம் ஜனங்களைச் சேர்ந்தவன். நான் ஒரு மகத்தான சபையைச் சேர்ந்தவன்’ என்று சிந்திப்பதன் மூலம் நம்முடைய சகோதரர்களில் எத்தனை பேர்களுடைய கண்கள் மூடப்பட்டுள்ளன. அதே ஆவியானது நம்முடைய கர்த்தருடைய நாட்களில் பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் மேலும், கற்றுத் தேர்ந்த எல்லா பண்டிதர்களின் மேலும் இருந்தது என்பதை அவர்கள் உணருவதில்லை. அவர், ‘நீங்கள் –உங்களுடைய பிதா பிசாசு’ என்று கூறினார். பரிசுத்த மனிதர்களும், நீதியான மனிதர்களும், வேதாகமத்தைக் கற்றுத் தேர்ந்த மனிதர்களும் வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள தவறி விட்டனர். புத்திசாலித்தனமான, அறிவாளிகளான, மகத்தான மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரின் எளிமையையும், அவருடைய கிரியைகளையும் காணத் தவறி விட்டனர். தேவனே, மனிதர்களுடைய இருதயங்களைத் திறந்து, அவர்களுடைய கண்களையும் திறந்தருளும், (அப்பொழுது) நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த மணி நேரத்தை அவர்களால் காண முடியும். செய்தியானது எப்படியாக அது இருக்கும் விதமாகவே சரியாகப் புறப்பட்டு வரும் என்று முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது, நியாயத்தீர்ப்பு தாக்குவதற்கு முன்பாக அவர்கள் இரக்கத்தைக் கொண்டிருப்பார்களாக. இந்தப் பிற்பகல் வேளையில், தங்களுடைய கரங்களை உயர்த்தி யுள்ள ஒவ்வொருவருக்கும் அருளுவாராக, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய சரீரங்களுக்குள்ளும், அவர்களுடைய இருதயங் களுக்குள்ளும், அவர்களுடைய ஜீவியங்களுக்குள்ளும், அவர்களுடைய உள்ளான மனிதனுக்குள்ளும் வந்து, அவர்களை மறுபடியும் பிறக்கும்படி செய்து, அவர்களை கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டிகளாக ஆக்குவீராக. அவர்களுடைய கண்கள் திறந்து, ‘நான் ஏன் முன்னரே அதைக் காணவில்லை-?’ என்று கூறுவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. சமீபமாயுள்ள இந்த மகத்தான மணி நேரத்திலிருந்து அவர்கள் காக்கப்படுவார்களாக. நாங்கள் அதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், உம்முடைய மகிமைக்காக அவர்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆமென். 49. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? ‘நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் முதலாவது அவர் என்னை நேசித்ததால்’ என்ற இசைத்தந்தியை (chord) எங்களுக்குக் கொடுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துவோம். ... அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் முதலாவது அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். நான்... இப்பொழுது, நாம் பாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் அதைச் செய்கிறபடி, உங்களுக்குப் பின்னால், உங்களுக்குப் பக்கத்தில், உங்களுக்கு முன்னால் சுற்றிலும் சென்று யாராவது ஒருவரோடு கரங்களைக் குலுக்குங்கள். ... அவரை நேசிக்கிறேன் ஏனெனில் முதலாவது அவர் என்னை நேசித்ததால் சம்பாதி... (வைத்தியர்) என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 50. எத்தனை பேர் போவதற்கு முழுவதுமாக ஆயத்தமாக இருப்பதாக உணருகிறீர்கள்-? ஓ, அது அற்புதமாய் இல்லையா-? எக்காளம் சத்தமிடுமானால், அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது-? நாம் ஒரு சிலுவைக்கு வந்து, ஒரு கிரீடத்தைப் பெற்றிருக்கிறோம். நாம் கைவிடப்பட முடியாது. தேவன் ஏற்கனவே நம்மை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் தம்முடைய ஆவியை அனுப்பியிருக்கிறார். என்ன சம்பவிக்கும் என்று அவர் சொன்ன விதமாகவே, பரிசுத்த ஆவியானவர் சரியாக இங்கே நம்மோடு இருந்து, கிரியைகளைச் செய்து, கிரியைகளை நடப்பித்து, செயல் படுகிறார். தேவன் உங்களை அழைப்பது உங்களுக்கு சந்தோஷமாக இல்லையா? அப்படியானால் அவர்களுக்காக பரிதாபமாக இருப்பதை உங்களால் உணர முடியும்; அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதீர்கள், ஆனால் கண்கள் மூடப்பட்டு அதைக் காண முடியாத அவர்களுக்காக பரிதாபம் கொள்ளுங்கள். அவர்கள் அதைக் காண்பார்கள் என்று உலகத் தோற்றத்துக்கு முன்பே தேவன் அறிந்திருந்தாலொழிய அவர்களால் அதைக் காண முடியாது. ‘அவர் முன்னறிந்த யாவரையும், அவர் அழைத்தார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கி இருக்கிறாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்,’ ஏற்கனவே (அதைச் செய்து விட்டார்.) அது அவருடைய புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்று தேவன் தம்முடைய முன்னறிவின் மூலமாக அறிந்து கொண்டவர்களை மீட்கும் பொருட்டாக கிறிஸ்து வருகிறார். ஆமென். அது ஒரு அற்புதமான காரியமாக இல்லையா-? 51. இந்தப் பிற்பகல் வேளையில், இங்கே நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதையும், இந்த எல்லா மகத்தான காரியங்களும் சம்பவித்துக் கொண்டிருப்பதையும், இங்கே நாம் கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாக இருப்பதையும் அறியும் போது. உங்களுடைய ஜீவியம் அதை நிரூபிக்கிறது. இப்பொழுது, உங்களுடைய ஜீவியமானது அதனோடு சரியாக இல்லையென்றால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டீர்கள். அது சரியே. ஆனால் நீங்கள் அதைக் கண்டு, புரிந்து கொண்டு, அதற்காக தேவனைத் துதிப்பீர்களானால், உங்களுடைய ஜீவியம் முழுவதும் தேவனுடைய நீதியால் நிரம்பியுள்ளது; ஏதோவொன்றை செய்வதற்கு அது உங்களுக்குக் கடினமாக இருப்பதில்லை... நீங்கள் தவறான எதையும் செய்ய விரும்புவதில்லை. அங்கே தான் அந்த இரண்டு மகத்தான பள்ளிகளும் அடி ஆழத்தில் போய் விட்டன, ஆர்மீனியன் உபதேசம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை – குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். அது தான் கிரியைகள். மேலும் மறுபுறத்தில், கால்வீனிஸ்டுகள் (Calvinists), ‘தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் இரட்சிக்கப்பட்டேன், நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன்’ என்பதற்குப் போய் விட்டனர். பாருங்கள்-? ஆனால் பாதையின் நடுவில் அது உள்ளது. நீங்கள் அவரை நேசிப்பீர்களானால், நீங்கள் தவறான எதையும் செய்ய மாட்டீர்கள், உங்கள் மனைவியிடம் நீங்கள் செய்வதைப் போல. 52. என்னுடைய மனைவி, நான் அடிக்கடி கடல் கடந்து வெளி நாடுகளுக்குப் போவேன். நான் வெளிநாடுகளுக்குப் போகும் போது, நான் புறப்பட்டு அவளிடம் சென்று, ‘திருமதி. பிரன்ஹாம், நான் போயிருக்கும் போது, உனக்கு வேறு கணவன்மார்கள் உண்டாயிருக்க வேண்டாம்’ என்று கூறுவதில்லை. அவளும் என்னிடம் வந்து கழுத்துக் காலரைப் பிடித்து, ‘வாலிபரே, வேறு மனைவிகள் வேண்டாம்’ என்று கூறுவதில்லை. அது ஒரு வீடாக இருக்காதா-? இருக்காது. நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறோம். நான் அவளை முத்தமிட்டு குட்பை சொல்லுவேன். நான், ‘இனிய இருதயமே, எனக்காக ஜெபி’ என்று கூறுவேன். அவள், ‘பில்லி, நான் ஒவ்வொரு மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருப்பேன்’ என்பாள். அங்கே தான் நாங்கள் இருக்கிறோம். அவள் ஏதாவது புருஷனைக் கொண்டிருக்கப் போகிறாளோ என்று நான் கவலைப்படுவதில்லை. நான்... நான் வேறு மனைவியைக் கொண்டிருக்கப் போகிறேனோ என்று அவள் கவலைப்படுவதில்லை. ஏன்-? நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். நாங்கள் ஒருவரை ஓருவர் நேசிக்கும் காலம் வரை, அது எப்போதுமே அவ்விதமாகத்தான் இருக்கும். நிச்சயமாக. 53. இப்பொழுது, நான் வெளிநாட்டிற்கோ அல்லது எங்காவது போயிருந்து, நான் – நான் தவறான ஏதோவொன்றைச் செய்தால், நான் வேறொரு ஸ்திரீயை நேசித்தால். அவள் அதற்காக என்னை மன்னிப்பாள் என்று நம்புகிறேன். நான் வந்து அவளிடம் சொன்னால், அவள் என்னை மன்னித்து விடுவாள் என்று நம்புகிறேன். ஆனால் அந்த பரிதாபமான சிறு பெண் 37 வயதுள்ளவளாயிருந்து, நரைத்த தலையைக் கொண்டிருந்து, எனக்கும் பொது ஜனங்களுக்கும் இடையே நின்றாள், மேலும் அவ்விதமாக ஆகிறது, நான் அவளை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன், அவள் எல்லாவற்றையும் எனக்கு மன்னித்து விடுவாள் எனினும், நான் அவளை எதற்காகவும் புண்படுத்த மாட்டேன். நான் அவளை நேசிக்கிறேன். நான் அவளை நேசிக்கிறேன். நான் அவ்விதமாக அவளை நேசிக்கும் காலம் வரை, அதைக் குறித்து உலகத்தில் அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. நீங்கள் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் நேசிக்கும் காலம் வரை, நீங்கள் எந்த சிகரெட்டையும் புகைக்கவோ, எந்த விஸ்கியையும் குடிக்கவோ, தவறான எதையும் செய்யவோ மாட்டீர்கள். நீங்கள் கர்த்தரை நேசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் புகை பிடிப்பதையும், குடிப்பதையும், மற்ற யாவற்றையும் நிறுத்த முடிந்து, அவரை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் இழக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். அது சரியே. ‘கிரியையினால் அல்ல, கிருபையினாலே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.’ 54. இப்பொழுது, உங்களுடைய ஜீவியமானது இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தோடு இணங்கவில்லையென்றால், அதாவது, அவர் தம்முடைய வார்த்தையில் கூறியுள்ளபடி: ‘நீங்கள் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து போ என்று சொல்லி, சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது சம்பவிக்கும்; நீங்கள் சொல்லுவது உங்களுக்கு உண்டாகும்,’ நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அது. அந்த மலையைத் தள்ளுண்டு போகும்படி செய்யக்கூடிய ஒரே வழி என்னவெனில், தெய்வீகமாகப் பேசுவதின் மூலமே. நீங்கள் தேவனுடைய குமாரனாக இருந்து, நீங்கள் தேவனை ஏற்றுக் கொண்டிருப்பீர்களானால், (அவர் சோவாக (Zoe) இருக்கிறார், தேவனுடைய சொந்த ஜீவன்), நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக ஆகிறீர்கள். பிறகு உங்களுடைய குறிக்கோள் சரியாக இருக்கு மானால், உங்களுடைய நோக்கம் சரியாக இருக்குமானால்... 55. (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்.)... தேவனுக்கு மகிமை, பேசி என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். அது சம்பவித்தாக வேண்டும். ஆனால் இங்கே விசுவாசிப்பதற்கு எதுவுமே இல்லாது இருக்கும் போது, நீங்கள் எவ்வாறு அதில் எப்போதாவது விசுவாசமாயிருக்க முடியும்-? தேவன் பரிசுத்த ஆவியில் வந்தாக வேண்டும். அங்கே அநேக போலியான காரியங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். அங்கே அநேக போலிகள் உள்ளன என்பதை நான் அறிவேன்; குறை கூறிக் கொண்டிருக்கும் அநேக காரியங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொரு சீர்திருத்தத்திலும் இருக்கின்றது. அது சரியே. மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க சபைக்கு விரோதமாக எவ்வாறு பேசி, அதனோடு கடந்து செல்ல முடிந்தது என்பது கேள்வியல்ல. கேள்வி என்னவெனில், அதைப் பின்தொடர்ந்த எல்லா மதவெறித்தனத்திற்கும் மேலாக தம்முடைய தலையை உயர்த்தி வைத்திருக்க போதுமான கிருபையை அவர் எவ்வாறு கொண்டிருந்தார் என்பது தான். அவ்விதமாகத் தான் ஒவ்வொரு சீர்திருத்தத்திலும் இருந்திருக்கிறது. அந்த விதமாகத்தான் இன்றும் உள்ளது. அங்கே அநேக மத வெறித் தனங்கள் அதில் சேர்க்கப்பட்டன, அது தெய்வீக சுகமளித்தல் என்றும் அடையாளங்கள் அற்புதங்கள் என்றும் அழைக்கப்பட்டன, அது அவ்வாறல்ல. ஆனால் ஒரு கள்ள டாலர் நோட்டு எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது-? ஒரு கள்ள டாலர் நோட்டு அங்கு எங்கோ உண்மையான ஏதோவொன்று உள்ளது என்று பேசுகிறது. ஏனெனில் தேவனுடைய வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. நாம் அதைக் கண்டு கொண்டிருப்பதற்காக நான் சந்தோஷமாயிருக்கிறேன். 56. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு கர்த்தருக்குச் சித்தமானால், 7:30 மணிக்கு, அல்லது, ‘இருதய வாசலுக்குள் வாசல்’ என்ற பாடத்தின் பேரில் பேச விரும்புகிறேன். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு தேவன் இழக்கப்பட்டவர்களை இரட்சிக்க வேண்டும் என்றும் வியாதியஸ்தர்களை சுகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்த்து வாருங்கள். டாக்டர் வேயில்...., *******